இந்தப்  பதிவு அதிர்ஷ்டத்தை நம்புகின்றவர்களுக்கு மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை முதலில் சொல்லி விட விரும்புகிறேன்.என்னைப்  பொறுத்தமட்டில் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் ஒரு பங்கு நிச்சயம் வகிக்கிறது என்றே நினைக்கிறேன். இளைய ராஜா, டெண்டுல்கர் போன்ற சாதனையாளர்களே அதிர்ஷ்டமும் இருந்ததால் தான் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்தது  என்கின்றார்கள். அத்தகைய  அதிர்ஷ்டத்தை  வாழ்க்கையில் ஈர்ப்பது எப்படி? மேலே படியுங்கள்.........





ஜோதிடம்: உண்மையில் பிறந்த நேரம் தான் ஒருவரின் வாழ்வை தீர்மானிக்கிறது. ஒருவர் நல்ல நேரத்தில் பிறந்து விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் கூடவே இருக்கிறது என்று அர்த்தம். ஜாதகம் பலமாக இல்லாதவர்கள் தான் மற்ற வழிகளில் அதைப்  பெற முயற்சிக்க வேண்டும்.

எண் கணிதம் (Numerology): குழந்தைகளுக்கு நல்ல சக்தி வாய்ந்த பெயர் சூட்டுங்கள். எல்லா ஒலிகளுக்கும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தி உண்டு. நல்ல பெயர்களை நாள் தோறும் பலரும் உச்சரிக்கும் போது அந்த குழந்தைக்கு positive சக்தி உண்டாகும். பெயர் சூட்டும் போது எண் கணிதம் மற்றும் ஜோதிடம் (Astrology) பார்த்து வைக்க வேண்டும்.

வாஸ்து: வீடு வாஸ்து பலம் பெற்று இருந்தால் அது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். முற்றிலும் வாஸ்துபி படி வீடு காட்டுவது சிரமம். முடிந்த மட்டில் வாஸ்துப்படி வீடு கட்டி அதில் வாழ்வது ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வாஸ்துக்  கோளாறு உள்ள இடங்களில் கல் உப்பு வைக்கலாம். மஞ்சள் தண்ணீர் தெளிக்கலாம்.

அதிர்ஷ்டக் கல்:  சரியான அதிர்ஷ்டக்கல் (Gem stone) அணிவதாலும் ஓரளவு அதிர்ஷ்டத்தைப்  பெறலாம்.

மந்திரம் உச்சரித்தல்: கடவுள் சக்திக்கு மீறிய சக்தி உலகில் இல்லை. ஜாதகம் பலமில்லாதவர்களும் கடவுள் பக்தியினால் கெடு பலன்களைக் குறைத்துக் கொள்ளலாம். ஓம் மந்திரம், காயத்ரி ஜெபம், கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், சுப்ரபாதம் போன்றவற்றை உச்சரிக்கலாம். அல்லது அவற்றைக் கேட்கலாம்.

யோகா: யோகா செய்வதால் உடலும் உள்ளமும் உறுதி பெறுகிறது. அது உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். தியானத்தில் இருக்கும் போது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது போல் கற்பனை செய்யுங்கள். 

மேற்கூறிய உத்திகளை கடைப்  பிடித்தால் நிச்சயம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். 

வாழ்க வளமுடன்!


                                          15 எளிய  வாஸ்துப்  பரிகாரங்கள் 

உங்கள் ராசி நட்சத்திற்கு ஏற்ப வாஸ்து விதிகள் மாறுமா?

Post a Comment

 
Top