கல்யாணம் ஆகி ஒரு 5 அல்லது 10 வருடங்கள் ஆகி விட்டால் ஆண்கள் மனைவிகள் மீது அதிருப்தியாக இருப்பதும் மனைவிமார்கள் கணவன்மார்கள் மீது அதிருப்தியாக இருப்பதும் உலகம் முழுவதும் நாம் காணும் ஒரு நிகழ்வாகத்தான் இருக்கிறது. ஆண்கள் மனைவிமார்களைப் பற்றி கூறும் முதன்மையான புகார்கள்  எவை? மேலே படியுங்கள்....


மனைவிகளுக்கு எவ்வளவு தான் நன்மைகள் செய்தாலும் திருப்தி ஏற்படுவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பு மேலும் மேலும் கூடிக் கொண்டே போகிறது. சிகரட் பிடிப்பதை நிறுத்தினால் நண்பர்களிடம் பேசுவதையும் நிறுத்த சொல்லுவார்கள். 8 மணிக்கு வீட்டுக்கு வந்தால் 7 மணிக்கு வர சொல்லுவார்கள். ஏழு மணிக்கு  வந்தால் 6 மணிக்கு வர வேணும் என்பார்கள். ஆனால் சம்பளம் மட்டும் அதிகம் வர வேண்டும் என்றும் சொல்லுவார்கள்.

ஒரு பரிசு வாங்கிக் கொடுத்தால் அடுத்த முறை 2 வேண்டும் என்பார்கள். சுருக்கமாக சொன்னால் அவர்களின் ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அளவே இல்லை என்பதே ஆண்களின் புகாராக உள்ளது. எவ்வளவு தான் செய்தாலும் செய்யாத குறைகளைப் பற்றியே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்கிறார்கள்.

கொஞ்சம் அவர்கள் சொல் பேச்சுக் கேட்க ஆரம்பித்தால் போதும், அவ்வளவு தான், முற்றிலுமாக  கணவனை அடக்கி ஆள  ஆசைப் படுவார்கள். ஒரு நாய்க் குட்டி போல் கணவன் தன்னிடம் வளைய வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மொத்தத்தில் மனைவிகளின் ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அளவே இல்லை என்பது ஆண்களின் முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது, எத்தனை செய்தாலும் அதை அவர்கள் பாராட்டுவதில்லை, குறைகளைத் தான் அவர்கள் பெரிது படுத்தி கும்மி அடித்து எல்லோரிடமும் புலம்புகிறார்கள் என்பது ஆண்களின் இரண்டாவது குற்றச்சாட்டு ஆகும்.

எது எப்படியோ எல்லோரும் வாழ்க்கையை எப்படியோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் கொடுமையான உண்மை ஆகும்.

பெண்களின் ஆண்கள் மீது கூறும் புகார் பற்றி இன்னுமொரு வலைப் பதிவில் காண்போம்.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top