வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே  இருக்கின்றனர். நல்ல காற்று வசதியும் சூரிய வெளிச்சமும் இருக்குமாறு வீடு கட்ட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் நம் தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட சேனல் டியூன் ஆவது போல், ஒரு குறிப்பிட்ட கட்டட வடிவமைப்பில் (building design) ஒரு கட்டடத்தைக் கட்டினால்  அக்கட்டடத்திற்குள் நல்ல அதிர்வுகள் ஏற்படும் என்பதும் ஏன் உண்மையாக இருக்கக்  கூடாது?




1. மனை வாங்கும்போது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருப்பது நல்லது. தெருக்குத்து இல்லாத மனை விசேஷம் எனலாம்.

2. கட்டடம் கட்டும்போது கிழக்கிலும் வடக்கிலும் அதிக காலி இடம் விட்டு கட்ட வேண்டும்.

3. வடக்கு பகுதி பள்ளமாகவும் அதிக எடை இல்லாதவரும் கட்ட வேண்டும். நீர் சேமிக்கும் தொட்டி அங்கு இருக்கலாம்.

4. தெற்கு பகுதி சற்று மேடாக இருத்தல் நலம். அதே சமயம் அங்கு அதிக எடை ஏற்றலாம். மாடி படிக்கட்டு போன்ற எடை ஏற்றும் கட்டுமானம் தெற்கு பகுதியில் நல்ல பலன் தரும்.

5. குழாய் கிணறு (borewell) வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் வர வேண்டும்.

6. சமையல் அறை தென் கிழக்கு மூலையில் (அக்னி மூலையில்) அமைக்க வேண்டும்.

7. படுக்கை அறை தென் மேற்கில் இருத்தல் நலம்.

8. கழிப்பறை மற்றும் குளியலறைகள்  வட மேற்கில் (வாயு மூலை) வர வேண்டும்.

9. தென் மேற்கு மூலையில் (குபேர மூலை) கழிப்பறை மற்றும் குளியலறைகள் அமைக்க கூடாது. அமைத்தால் கடன் நிச்சயம் வாங்குவார்கள். சிலருக்கு கடன் கட்டுக்கடங்காமல் போகவும் வாய்ப்பு உண்டு.

10. வட கிழக்கு மூலையில் (ஈசான்ய  மூலை) கழிப்பறை மற்றும் குளியலறைகள் அமைக்க கூடாது. முக்கியமாக கழிப்பறை நிச்சயம் கூடாது. அந்த அமைப்பு அங்கு வசிக்கும் ஆண்களின்  உயிருக்கே உலை வைக்க வாய்ப்பு உண்டு.

11. தென் கிழக்கு மூலை  பாதிக்கப்பட்டால் பெண்களுக்கு பாதிப்பு உண்டு.

12. வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் (compound wall) இருப்பது நல்லது.

13. பிரதான நுழை வாசல் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ இருத்தல் வேண்டும்.

14. ஒவ்வொரு அறையிலும் கூடிய மட்டிலும் நுழைவது கிழக்கிலோ அல்லது வடக்கிலோ இருக்குமாறு கட்டுங்கள்.

15. கோவிலோ அல்லது இடுகாடோ அல்லது மின்மாற்றியோ  (transformer) வீட்டின் மிக அருகாமையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

மேற்கூறிய வாஸ்து குறிப்புகள் மிகவும் பயன் உடையவைகளாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்!

             ஜோதிடம் விஞ்ஞானம் ஆக முடியுமா?

கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள்

Vastu inquiries can be sent to shivkrishche@gmail.com
23 Nov 2014

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top