நம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டிருக்கிறது. நம்பிக்கை சிறிதேனும் இல்லாத நிலை ஒருவருக்கு வந்து விட்டால் அவர் சாகத் துணிந்து விடுவர் என்பது நிச்சயம். நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பது நிஜம். நாளை நம் கவலைகள் யாவும் தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில் தான் பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை ஆகும். ஆம்,  நம்பிக்கை தான் வாழ்க்கை. மேலே படியுங்கள்......



நாம் எல்லோரும் நம் மனதில் ஏதோ ஒருவிதமான நம்பிக்கையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்பிக்கை இல்லாவிட்டால் நாம் வாழவே முடியாது என்பது தானே நிஜம்? இரவில் நிம்மதியாக தூங்கப் போகின்றோம், நாளை கண்டிப்பாக தூக்கத்திலிருந்து விழிப்போம் என்கின்ற நம்பிக்கையில். அம்மாவை நாம் அவர் தாம் நம் அம்மா என்று நம்பிக்கையுடன் ஏற்க வில்லையா? அவர் காட்டியவரை தந்தை என்று  நம்பிக்கையுடன் ஏற்கவில்லையா? இதிலெல்லாம் சந்தேகம் அல்லது நம்பிக்கையின்மை வந்து விட்டால் வாழ்க்கை நரகமாகிப் போகாதா?

எப்பொழுதும் நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. அஷ்ட லஷ்மிகளில் எல்லா லஷ்மிகளும் நம்மை விட்டு போய் விட்டாலும் தைரிய லஷ்மியை மட்டும் நாம் நம்மை விட்டுப் போக விடக் கூடாது. அப்படி தைரிய லஷ்மியை நம்மோடு வைத்துக் கொண்டால், நாம் ஒரு போதும் நம்பிக்கையை இழக்க மாட்டோம். 

நாளை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார நினைக்க வேண்டும் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும். இரவுக்குப் பின் விடிந்து தானே ஆக வேண்டும்? புயலுக்குப் பின் அமைதி தானே நிலவும்? 30 வருடங்களுக்கு மேல் ஒருவன் வாழ்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என்பார்கள்.

இன்று  பணக் கஷ்டம், அவமானம், உறவுகளில் விரிசல், அமைதி இல்லாத மனம் என்று பலவிதமான துயரங்களில் நீங்கள் அவதியுறலாம். தைரியமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். இறைவனை நம்பிக்கையுடன் வணங்குங்கள். வாழ்க்கை கூடிய சீக்கிரம் உங்களுக்கு வசப்படும். வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். 

நம்பிக்கை தான்டா சாமி  வாழ்க்கை!

வாழ்க வளமுடன்!


நீங்கள் இழப்பதற்கு என்ன இருக்கிறது இவ்வுலகில்?

உங்கள் பிரச்சினைகள் பூதாகரமாக தெரிவதேன்?
05 Jun 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top