April 11, 2025 08:35:47 AM Menu
 

காமம் என்பது எல்லா உயிரினங்களின் இயல்பான ஒரு உணர்வு ஆகும். இயற்கையான உணர்வு என்று கூட சொல்லலாம். பருவ வயது வந்தவுடன் நம் உடலில் உள்ள சிலபல ஹார்மோன்கள் 'ஓவர்டைம்' போட்டு வேலை செய்யும்போது நாம் தடுமாறித்தான் போகின்றோம். மன்மதலீலையை வென்றார் உண்டோ?  சில பெரிய மனிதர்கள் குறிப்பாக ஆன்மிகத்தில் உள்ளவர்கள் காமத்தை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள்.  காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா? அது நிஜமாகவே முடியுமா? மேலே படியுங்கள்.....



சில ஆன்மிக குருமார்கள் காமத்தைக் கட்டுபடுத்த வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். விந்தை அடக்கி மேல் நோக்கி செலுத்தினால்  நன்மைகள் கோடி உண்டு என்று சொல்லுகின்றார்கள்.  விஞ்ஞானத்தில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. காம உணர்ச்சி தவறானது என்றால் இயற்கை அந்த உணர்வை அத்தனை ஜீவராசிகளுக்கும் கொடுத்திருக்குமா என்கின்ற கேள்வி எழுகின்றது. இயற்கையான எதுவும் தவறாக இருக்க முடியாது என்பது விதி. அப்படி பார்க்கின்ற போது காமம் தவறில்லை என்றே தோன்றுகிறது. 

ஆனால் அதற்காக 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே இருத்தலும் தவறு தான். காமத்தை அடக்கக் கூடாது என்பது பொது விதி. ஆனால் கல்யாணம் வரை நாம் காத்து இருக்கத் தான் வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் காமக்  களியாட்டங்களில் முழுமையாக ஈடு பட்டு இன்பத்தை துய்க்கலாமே?

உடலின் எந்த தேவைகளையுமே நாம் அடக்கக் கூடாது என்பதே நிஜம். காமமும் அப்படியே. ஆனால் சில நேரங்களில் நமக்குக் கட்டுப் பாடு நிச்சயம் தேவைப் படுகின்றது என்பது உண்மை தான். அந்த கட்டுப் பாடு தான் ஒரு வேளை  நம்மை மிருகங்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றதோ?

பொதுவாக காமத்தைக் கட்டுப் படுத்தக் கூடாது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதே சமயம் இடம் பொருள் ஏவல்  பார்த்தது அளவுடன் வைத்துக் கொள்ளுவது சரியாக இருக்கும் என்று சொல்லி  முடிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

காதலுக்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனை பேர்? 

சுக்கிரன் ஆண்களையும் பெண்களையும் படுத்தும் பாடு 






15 Jun 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top