அந்த காலத்தில் வீட்டுக்கு ஒருவர் படையில் இருப்பார்கள். இன்று வீட்டுக்கு ஒருவர் வெளி நாட்டில் இருக்கின்றார்கள்(உபயம் IT Companies). வெளிநாட்டில் சென்று பணம் சம்பாதிப்பது என்பது இன்று அத்தியாவசியமான விஷயமாகி விட்டது. வெளி நாடு செல்லும்  யோகம் யாருக்கெல்லாம் அமையும்?-ஜோதிடரீதியாக? வெளி நாடு செல்லும்  யோகம் ஜாதகப்படி உங்களுக்கு உள்ளதா?  மேலே படியுங்கள்.....ஜாதக கட்டத்தில் 12 ராசிகளில் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் இவை மூன்றும் ஜல ராசிகள். இவற்றை லக்னமாகவோ, ராசியாகவோ கொண்டவர்கள் வெளி நாடு செல்ல வாய்ப்புண்டு. 

லக்கினாதிபதி 9 ஆம் வீட்டிலோ, குரு அல்லது சந்திரன் 12 ஆம் வீட்டிலோ இருந்தாலும் யோகம் உண்டு. குரு வக்கிரமானாலும் யோகம் உண்டு.

லக்கினம், 9 ஆம் வீடு, 12 ஆம் வீட்டு அதிபதிகள் சர ராசியில் இருந்தாலும் வெளி நாடு செல்லலாம்.

9 ஆம் வீட்டிலோ, 12 ஆம் வீட்டிலோ, ஜல ராசிகளில் நிற்கும் கிரககங்களின் திசா, புத்திகளிலோ  வெளி நாடு செல்லும் யோகம் ஏற்படும். 

9 ஆம் அதிபதி 12 ஆம் வீட்டிலும் 12 ஆம் அதிபதி 9ஆம் வீட்டிலும் இருந்தாலும் யோகம் உண்டு. ஒரு சிலர் கேது திசையில் வெளி நாடு செல்வர்.


                     15 எளிய வாஸ்து பரிகாரங்கள் 


                              முக்கிய 15 வாஸ்து விதிகள் 

Post a Comment

 
Top