பொதுவான வாஸ்து விதிகள் பற்றி நான் ஏற்கனேவே ஒரு வலைப் பதிவில் சொல்லியிருக்கிறேன். ஆனால் ஒரு சிலர் அவரவரின்  ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்றாற்போல் வாஸ்து  விதிகள் மாறும் என்கிறார்கள். உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ப வாஸ்து  விதிகள் மாறுமா? மேலே படியுங்கள்.....



ஜோதிடம், எண்  கணிதம், வாஸ்து போன்றவற்றில் உள்ள பெரிய குறையே ஒவ்வொரு நிபுணரும் வெவ்வேறு கருத்துகளையும் , விதிகளையும் சொல்லுவது தான். கடைசியில் சாதாரண மனிதன் எதை கடை பிடிப்பது எதை விடுவது என்று புரியாமால் மண்டை குழம்பி நிற்கிறான் என்பது நிஜம்.

கடக, விருச்சிக, மீன ராசிக்காரர்கள் வடக்கு வாசல் இருக்கும் படி வீடு கட்டினால் நல்ல பலன் என்கிறார்கள். கிழக்கு வாசல், சிம்மம், மேஷம், தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்தது என்கிறார்கள். மிதுனம், கும்பம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் மேற்கு வாசலை தேர்தெடுக்க வேண்டும் என்கிறார்கள். ரிஷப, கன்னி மகர ராசிக்காரர்களுக்கு உகந்த வாசல் தெற்கு வாசல் ஆகும்.

அதே போல் தான் ஒவ்வொரு நட்சத்திரகாரர்களுக்கும் ஒரு திசை உகந்ததாக இருக்கும் என்கிறார்கள் சில வாஸ்து நிபுணர்கள்.

உண்மையில் வாஸ்து பார்க்கும் போது ராசி, நட்சத்திரம் போன்றவற்றைப் பார்க்க வேண்டியதில்லை என்பதே உண்மை.

ஒரே வீட்டில் பல ராசிக்காரர்களும் நட்சத்திரகாரர்களும் இருப்பார்கள்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசல் வைப்பது எங்ஙனம் சாத்தியமாகும்? குடும்பத் தலைவரின் ராசி நட்சத்திரம் பார்த்து தேர்தெடுப்பதும் தவறு தான்.

எந்த திசைப் பார்த்த வீட்டு மனையையும் வாங்கலாம். பாதகமில்லை. வடக்குப் பார்த்த மனையும் கிழக்குப் பார்த்த மனையும் விசேஷம். எந்த திசையில் வேண்டுமென்றாலும் வாசல் இருக்கலாம். தப்பில்லை. என்ன கவனிக்க வேண்டுமென்றால் கிழக்கில் வாசல் வைப்பதாக இருந்தால் வடக்கு சார்ந்த கிழக்கில் வைக்க வேண்டும். 

வடக்கில் வாசல் வைப்பதாக இருந்ததால் கிழக்கு சார்ந்த வடக்கில் வைக்கவும். தெற்கு என்றால், கிழக்கு சார்ந்த தெற்கு , மேற்கு என்றால், வடக்கு சார்ந்த மேற்கு என்று தேர்ந்தெடுக்கவும்.

வாழ்க வளமுடன்!

வாஸ்து சாஸ்திரம் வேலை செய்கிறதா?

கிரகங்களைப் பற்றிய சுவையான செய்திகள் 
04 Feb 2015

Post a Comment

  1. வடகிழக்கில் சமையல் அறை இருக்கலாமா வாடகை வீட்டில்

    ReplyDelete
    Replies
    1. தென்கிழக்கு அக்னி மூலை தான் சமையல் அறைக்கு மிகவும் உகந்தது ஆகும். அதை விட்டால் வட மேற்கு வாயு மூலையில் அமைக்கலாம். ஆனால் அது இரண்டாம் தரமானதே.

      Delete

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top