வாழ்க்கையில் நாம் பலவிதமான இலட்சியங்களை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக எல்லோரும் பணம் சம்பாதிப்பதையே இலட்சியமாக கருதுகின்றனர். பணம் சம்பாதிப்பதும் ஒரு முக்கியமான இலட்சியம் தான். ஆனால் அந்த ஒரு இலட்சியம் மட்டும் போதாது.



10 விதமான இலட்சியங்களை மேற்கொள்ளுங்கள்

1. செல்வம் சேர்ப்பது ஒரு முக்கியமான இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதை மறுக்க இயலாது. இருக்க நல்ல வீடு, ஆடம்பரமான கார், விலை உயர்ந்த ஆடைகள், வங்கியில் நிறைய சேமிப்பு, இதெல்லாம் வேண்டும் என்கின்ற இலட்சியம் தேவையானதே.

2. நல்ல தொழில் செய்ய வேண்டும் என்கின்ற இலட்சியமும் கட்டாயம் இருக்க வேண்டும்.  செய்யும் தொழிலில் சந்தோஷம் மற்றும் திருப்தி கிடைக்க வேண்டும்.

3. நல்ல குடும்பம் அமைய வேண்டும் என்கின்ற இலட்சியமும் அவசியம் தான்.

4. நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்பதும் நல்ல இலட்சியம் தான். நல்ல நண்பர்கள் கிடைத்தால்  உங்கள் வாழ்க்கை  சிறப்பது உறுதி.

5. நல்ல உடல் ஆரோக்கியம் பெறவும் இலட்சியம் வேண்டும்.

6. நல்ல மன ஆரோக்கியம் பெற வேண்டும் என்கின்ற இலட்சியமும் வேண்டும்.

7. நன்றாக உழைக்க வேண்டும் என்கின்ற இலட்சிய வெறி இருக்க வேண்டும்.

8. தேவைப்படும் போது விடுமுறை எடுத்து புத்துணர்ச்சி பெற வேண்டும்.

9. பல இடங்களுக்கு மற்றும் நாடுகளுக்கு  பயணம் செய்ய வேண்டும். பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டும். பலவிதமான் அனுபவங்களையும், அறிவையும் பெற வேண்டும்.

10. ஆன்மிக வளர்ச்சி அடைய வேண்டும். தன்னை அறிந்து அந்த பரம் பொருளையும் அறிய வேண்டும்.

பணப் பிரச்சினைக்குத் தீர்வு 

முக்கோண வெற்றி சூத்திரம் 







Post a Comment

 
Top