ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

சந்தோசமான வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மிகவும் அவசியம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க விரும்பினால் அதற்கு முதல் தேவை ஆரோக்கியம் தான். ஆரோக்கியமாக  வாழ்வது எப்படி? மேலே படியுங்கள் .........


இரசாயன உலகம் : இன்று உலகமே இரசாயனமயமாகிப் போனது. நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று அனைத்தும் 'மாசு' ஆகி விட்டது.  அப்புறம் ஆரோக்கியம் எப்படி சாத்தியம்?  அதனால், மருந்து மாத்திரைகளை உணவாய் சாப்பிடும் வழக்கம் வந்து விட்டது இன்று.


காற்று: நாம் வசிக்கும்  இடத்தைப் பொறுத்து காற்றில்  மாசு  அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.  முடிந்தால் நல்ல இடத்தில் வீடு கட்டி வசியுங்கள். வீட்டில் காற்றோட்டம் மிகவும் முக்கியம். ஜன்னல்களும் கதவுகளும் சரியாக அமைக்கப் பட்டால்  வீட்டில் நல்ல காற்றோட்டம் இருக்கும்.

குடிதண்ணீர்: இன்று நிலத்தடி நீரே பெரும்பாலான இடங்களில் கெட்டு விட்டது பெரும் அவலம். 'கேன் வாட்டர்' தான் இன்று அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அதில் எந்த சத்தும் இல்லை. மேலும் இரசாயன கலப்பு இருப்பதால் உடலுக்கு கேடு விளைவிக்க இடம் உண்டு. கிணற்று  அல்லது போர் தண்ணீர் பானைகளில் வைத்து பருகுவது சிறப்பு.

உணவு: இன்று பெரும்பாலான இறப்புகள் புற்று நோயால் ஏற்படுகின்றன. இரசாயனம் கலந்த உணவு பொருட்களை உட்கொள்ளுவதால் புற்று நோய் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. கூடிய மட்டும் இயற்கை உணவை  (Organic)  உண்ணுங்கள். காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

யோகா: தினசரி 'யோகா' செய்வது உடலுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மூச்சு பயிற்சி செய்வது அவசியம். தியானமும் சிறிது நேரம் பண்ணலாம்.

மனது: சந்தோசமாக வாழ்வதற்கு மனப் பக்குவம் அவசியம். மனதில் நல்ல நேர்மறையான எண்ணங்களை எண்ணுங்கள். எதிர்பார்ப்புகளை குறையுங்கள். எது நடந்தாலும் அதை துணிவுடன் எதிர் கொள்ளும் மன நிலையை வளர்த்துக்  கொள்ளுங்கள். இயற்கையையும் இசையையும் இரசியுங்கள். தினமும் சிரித்து வாழுங்கள்.

நிறைவு: மேலே சொன்ன விஷயங்கள் சொல்வது எளிது. கடை பிடிப்பது கடினம். ஆனால், சந்தோசமான வாழ்க்கை வாழ்வதற்கு சற்று கஷ்டப் படலாமே.



                       இலவசமாக பிரபஞ்ச சக்தி  

Post a Comment

 
Top