மனிதர்களில் நல்லவர்கள் மற்றும் பாபிகள் இருப்பது போல் கிரகங்களிலும் சுபக் கிரகங்கள் மற்றும்  பாப கிரகங்கள் என்று இருக்கின்றன என்று இந்திய ஜோதிடம் கூறுகிறது. பாப கிரகங்கள் எவை? சுபக் கிரகங்கள் எவை?மேலே படியுங்கள்....



குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர் பிறை சந்திரன் ஆகியோர் சுபக் கிரகங்கள் ஆவர். அவற்றிலும் குரு முழு சுபர். சுக்கிரனோ முக்கால் சுபர். அதாவது அவருக்கு கொஞ்சம் தீய குணங்களும்  உண்டு என்று ஆகிறது. புதன் பாதி சுபர், பாதி அசுபர். அதாவது புதன் நல்ல குணங்களையும் , தீய குணங்களையும் பெற்றவர். இன்னும் சொல்லப் போனால் புதன் சுபருடன் சேர்ந்தால் சுபராவர். பாபியுடன் சேர்ந்தால் பாபியாவார்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, மற்றும் தேய் பிறை சந்திரன் ஆகியோர் பாபக் கிரகங்கள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

சுபக் கிரகங்கள் எல்லோரும் எப்பொழுதுமே நல்லதையே செய்வார்களா? தீயக் கிரகங்கள் எப்பொழுதுமே தீமைகளையே செய்வார்களா? அப்படி அல்ல. சுபக் கிரகங்கள் கெடுதலும் செய்யலாம். பாபக் கிரகங்கள் நல்லதும் செய்யலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? உங்கள் லக்னத்தைப்  பொருத்துதான் ஒரு சுபக் கிரகம் நல்லது செய்ய முடியுமா அல்லது தீமை செய்யமா என்று கணிக்க இயலும். அதே போல் ஒரு தீயக்கிரகம் உங்களுக்கு நல்லது செய்ய முடியுமா என்றும் உங்கள் லக்னத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு லக்னத்திற்கு நல்ல வீடுகளுக்கு அதிபதியாக தீய கிரகங்கள் வந்தால் அவை நல்ல பலன்களையேத்  தருவார்கள். அதே சமயம் ஒரு லக்னத்திற்கு தீய வீடுகளுக்கு அதிபதியாக சுபர்கள் வந்தால் தீய பலன்களையே தருவர்.
ரிஷப லக்னத்திற்கு சனி சுப கிரகமாவார். சனி, ரிஷப, மற்றும் துலாம்  லக்னக்காரர்களுக்கு ராஜ யோக கிரகம் ஆவார். அவர் அந்த லக்னக்காரர்களுக்கு நல்லதையே செய்வார். அதே சமயம் முழு சுபரான குரு ரிஷப லக்னக்கார்களுக்குத்  தீமைகளையே செய்வார்என்பது பொது விதி ஆகும்.

ஆனால் சுபாவ சுபக் கிரகங்கள் தீய வீடுகளுக்கு அதிபதியானாலும் அதிக தீய பலன்களைத் தரமாட்டார்கள். சுபாவ பாபக்  கிரகங்கள் நல்ல வீடுகளுக்கு அதிபதியானாலும் அதீதமான நல்ல பலன்களைத் தரமாட்டார்கள் என்பது தான் நிஜம். சுபர் சுபர் தான். பாபி பாபி தான்.

அதிகக் கெடுபலன்களைக் கொடுக்க கூடியவர் கேது. அதிக நற்பலன்களைத் தரக் கூடியவர் குரு ஆகும்.

கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள் 


உங்கள் விதி எண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி?
22 Jan 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top