சந்தோஷமாக வாழ்வது எப்படி?

இன்றைய அவசர உலகத்தில் நாம் பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கிறோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நம் வசதி வாய்ப்புகள் பெருகியுள்ளன. இருப்பினும் சந்தோஷமும் நிம்மதியும் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும் போது நிம்மதி குறைந்திருப்பது  ஏன்? சந்தோஷமாக வாழ்வது எப்படி? மேலே படியுங்கள்........





சந்தோஷம் குறைந்தது எதனால்?: இன்று பணப் புழக்கம் வெகுவாய் அதிகரித்தும், சந்தோசம் குறைந்தது ஏன்? மக்களிடையே அன்பும், பண்பும் நேர்மையும் குறைந்து விட்டது. பெரியவர்களிடம் அவர்கள் காட்டும் மரியாதையும்  குறைந்து விட்டது.  பரஸ்பரம் அன்பு குறைந்ததால் 
  பாதுகாப்பு உணர்வும் குறைந்து விட்டது. சுயநலம் அதிகரித்து விட்டது. தவறான பழக்கவழக்கங்களும்  நம் வாழ்வை பெரிதும் பாதித்து விட்டன.

சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும்?: முதலில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். யோகா, தியானம்  தினசரி செய்யலாம். கூடியமட்டில் இயற்கை உணவை  உண்ணலாம். அனாவசிய பயங்களையும் எதிர்மறை எண்ணங்களையும் தவிர்க்கலாம்..எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் தாங்கும் மனப் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கின்ற நினைப்பில் இருந்து விடுபட வேண்டும். மரண பயம் நீங்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த சோகங்களில் வாழ்வதை நிறுத்த வேண்டும். எதிர்காலத்தை பற்றிய உணர்ச்சிவசப்படும் படபடப்புகள் கூடாது. நிகழ் காலத்தில் முழுமையாக இரசித்து வாழ வேண்டும்.


பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும். இல்லையென்றால் செய்யும் விஷயங்களை பிடிக்க பழக வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்.பலன்களை அதிகம் எதிர் பார்க்கக் கூடாது. எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டும்.  மனசு விட்டு சிரித்தால் நல்லது. இசையை இரசியுங்கள். மொத்தத்தில் சலனமற்ற பக்குவமான மன நிலையுடன் வாழப் பழக வேண்டும். உறவுகளில் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்..

மேலே கூறிய விஷயங்கள் எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிதாக இருக்கும். கடை பிடிப்பது சற்று கடினம் தான்.சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கு சற்று கஷ்டப் படலாமே? கஷ்டப் பட்டுக் கிடைக்கும் வெற்றிகள் சந்தோஷங்கள் தான்  நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்!





நம்பிக்கை தான் வாழ்க்கை 



சந்தோஷமாக வாழ்வது எப்படி, சந்தோஷம் குறைந்தது எதனால், சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும், யோகா, தியானம் மரண பயம்

Post a Comment

 
Top