ஆனந்தமாய் இரு மனமே!

மனம் அபரிதமான சக்தி வாய்ந்தது என்பதில் மாற்று கருத்து  முடியாது. ஆரோக்கியமான, வலிமையான மனதால் அற்புதங்களை செய்ய முடியும் என்பது நிஜம். எப்பொழுதும், உற்சாகத்துடனும், ஆனந்தத்துடனும் இருக்கும் மனதே ஒருவருக்கு சாதனைகளையும் வெற்றிகளையும் தேடித் தரும் என்பது உண்மை. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய்கள் அண்டாது.மனதை, எப்பொழுதும் ஆனந்தமாய் வைத்துக் கொள்ள தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை எளிமையாகி விடுகின்றது. உடல் ஆரோக்கியம் கிட்டுகிறது. மனதும்  ஆரோக்கியமாக இருக்கின்றது. பிறகென்ன, பணம், புகழ், பதவி எல்லாம் உங்களைத் துரத்தி, துரத்தி  வந்து சேரும் என்பதை சொல்லவும் வேண்டுமோ? மனமே!, மனமே! ஆனந்தமாய் இரு மனமே!................





நல்ல விஷயங்களை சொல்லுவது எவ்வளவு எளிதோ அவ்வளவு கடினம் அவைகளை கடை பிடிப்பது என்றால் அது மிகை ஆகாது. ஒருவருக்கு, நல்ல ஆரோக்கியம் இருக்கும் போதும், நல்ல செல்வ வளங்கள் இருக்கும் போதும், நல்ல குடும்பம் அமையும் போதும், அவர் மனம் ஆனந்தமாய் இருப்பது சகஜம் தான். ஆனால், வாழ்க்கை ஒரு சிலருக்கு பெரிய அளவில், பிரச்சினைகளையும், தோல்விகளையும், அவமானங்களையும் கொடுத்து விடுகிறது. அப்பொழுது அவர்களது, தன்னம்பிக்கையும், மன வலிமையையும் கேள்விக்குறியாகி விடுகிறது.....




எல்லா நிலைகளிலும், இன்பத்திலும், துன்பத்திலும் மனதை ஆனந்தமாய் வைத்துக் கொள்வதே சிறப்பு. அது ஒரு கலை, ஆற்றல், திறமை என்று சொல்லலாம். எந்த திறமையையும், வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், தீவிர பயிற்சி அவசியம் ஆகும்.

அது சரி, எப்பொழுதும் ஆனந்தமாய் இருப்பது எப்படி? தினமும்,காலையில் தியானம் செய்யலாம். தியானத்தில் இருக்கும் போது உங்கள் மனம் ஆனந்தமாய் இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் மனம் எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கும் என்று நினைத்துக் கொள்ள  வேண்டும். அடிக்கடி அதை சொல்லி வர வேண்டும். அது உங்கள் ஆழ் மனதில் பதியும் போது உங்களால் எல்லா நிலைகளிலும் ஆனந்தமாய் வாழ முடியும். துன்பங்கள், தோல்விகள்  உங்களை பாதிக்க முடியாது. தேவை, முறையான பயிற்சி தான்.

மனதை எப்பொழுதும் ஆனந்தமாய் வைத்திருங்கள். உங்களை சுற்றி நேர்மறையான அதிர்வுகளை பரப்புங்கள். வாழ்க்கை சொர்க்கமாகி விடும்.

வாழ்க வளமுடன்!

ஆன்மாவைத் தேடும் அற்புத விஷயங்கள் 

Post a Comment

 
Top