இன்று பொதுவாகவே மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. அதே சமயம் அவனது பிரச்சினைகளும் அதிகரித்திருக்கின்றன என்பதும் நிஜம். அதனால் தான் இன்று, ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் வாஸ்து போன்றவை அதிக அளவில் மக்களை ஈர்த்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.  வாஸ்து, ஜோதிடம் போன்றவை விஞ்ஞானப்பூர்வமானது அன்று. அதாவது இவைகளுக்கு  நாம் அறிவியல் ஆதாரம் தர இயலாது. ஜோதிடம், வாஸ்து போன்றவை நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டவை. வாஸ்து, ஜோதிடம் எந்த அளவுக்கு வேலை செய்யும்? மேலே படியுங்கள்........






என்னைப் பொறுத்தவரை ஜோதிடம், வாஸ்து, பெயர், ரத்தினங்கள் எல்லாமே வேலை செய்யும் என்றே நம்புகிறேன். அதற்காக, அவற்றையே மட்டும் நம்பி வாழக்  கூடாது என்பதும் என் கருத்து ஆகும். பொதுவாக, ஒருவன் பிறந்த நேரமே அவனது வாழ்வை பெரும்பாலும் நிர்ணயிக்கிறது எனலாம். அதே சமயம், நல்ல பெயர், 'வாஸ்து பலம்' பொருந்திய வீடு, சரியான ரத்தினங்கள் போன்றவையும் நமது வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதும் உண்மையே.



நல்ல நேரத்தில் பிறந்தவருக்கு வாஸ்து போன்றவைகளின் உதவி பெரும்பாலும் தேவைப் படாது. ஆனால், நடப்பு திசைகள் மோசமாக இருப்பவர்களுக்கு 'வாஸ்து பலம்' பொருந்திய வீடு, நல்ல பெயர், மந்திரங்கள், கடவுள் பக்தி, ரத்தினங்கள்  போன்றவை துணை இருந்து கெடு பலன்களை குறைத்தும் ,நல்ல பலன்களை அதிகரித்தும் உதவி செய்யும் எனலாம்.   

பொதுவாக, 60% லிருந்து 70% வரை ஜாதக பலன்கள் தான் நடக்கும். 30% லிருந்து 40% வரை வாஸ்து போன்றவை உதவி செய்யும்.

எல்லாவற்றிற்கும் மேலான உச்சநீதி மன்ற நீதிபதி இறைவன் தான் என்பதை மறக்கக் கூடாது. எவ்வளவு மோசமான திசை நடந்தாலும், நம்பிக்கையுடன் இறைவன் திருவடிகளை பற்றி விட்டால் கெடு பலன்கள் குறைந்து நல்ல
 பலன்கள்  அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. பிள்ளையார் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, காக்கைக்கு அன்னமிடுதல் போன்றவையும் கெடு பலன்களைக் குறைக்க உதவும் எனலாம்.

ஆக, ஜோதிடம் போன்றவைகளை ஒரு வழிகாட்டியாகவும், குறிகாட்டியாகவும் எடுத்துக் கொண்டு கடினமாக உழைத்து, கடவுளை நம்பிக்கையுடன் வணங்கி வந்தால் வாழ்வில் உயர்வது நிச்சயம் எனலாம். 

வாழ்க வளமுடன்!




உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ப வாஸ்து விதிகள் மாறுமா?

Post a Comment

 
Top