தொட்டான், விட்டான்


என்னவனே,

என் பெயர் எவ்வளவு அழகு என்பது நீ

உச்சரிக்கும்போது தானே எனக்கேத் தெரிந்தது!

ஒருவேளை, கூப்பிடுவது நீ என்பதால் என் பெயர்

 இனிமையாக தோன்றியதோ!


சொர்க்கம்  என்பது என் கற்பனைக்கு எட்டாமலிருந்து -உன்னை

 சந்திக்கும் வரை ............

ஆயிரமாயிரம் சொர்க்கங்களை ஒன்றாய் காண்பித்த

காதல் சித்தன்  நீ .......கோடி நரகங்களை கொட்டிக் கொடுத்தவனும் நீ தானே

தொட்டாய் -கை  விட்டாய் .......


நான் ஒன்றும் முட்டாள் இல்லை நீ நினைப்பது போல்....

நீ எனக்கு மீண்டும் சொர்க்கத்தைக்  காண அழைத்த பொழுது

கொடுமையான நரகம் அதன் பின் இருப்பதை அறிந்தே வந்தேன்

இம்முறை எனக்கு ஏமாற்றம் இல்லை .....

உண்மைக் காதல் -அது  அளவில்லா அன்பு-அசைக்க முடியாத நம்பிக்கை. நம்பிக்கை போனாலும் அன்பின் வீரியம்  மட்டும் என்றுமே மாறவே மாறாது.


தொட்டாய், விட்டாய்.-பரவாயில்லை..

மீண்டும் ஒரு சொர்க்கத்திற்காக  காதலுடன் காத்திருப்பேன் -அது அடுத்த ஜென்மமாக இருந்தாலும்.......


ஆசை அறுபது நாள் தானா?

கணவன் மனைவி சண்டை உறவை பலப்படுத்துமா?




Post a Comment

 
Top