ஜெயித்துக் காட்டுவேன்......நான் நித்ய க்ஷத்திரியன்...


மனிதன் ஒரு போராளி -அவன் 
நித்தம் ஒரு போர் புரிவான் , பணத்திற்காக 
பதவிக்காக, புகழுக்காக .......
சோம்பேறிகளை நான் இங்கு கணக்கில் கொள்ள வில்லை 
ஏனென்றால் நான் அவர்களை மனிதர்களாகவே நினைக்க வில்லை..

எத்தனை போர்கள்? எத்தனை வெற்றிகள்? எத்தனை தோல்விகள்?

நிறைய வெற்றிகள் குறைந்த தோல்விகள் பெற்றவன் பெயர் இங்கு 'வாழ்க்கையில் ஜெயித்தவன்'.

நிறைய தோல்விகள், குறைந்த வெற்றிகள் பெற்றவன் பெயர் "வீணாப்போனவன்".

நான் நித்தமும் போர்க்களத்தில் தான் உள்ளேன்...
வெற்றி எனக்கு அரிதாகி போனது..
விதியா? எனக்குத் தெரியாது-ஆனாலும் 
நான் புறமுதுகிட்டதில்லை ஒரு நாளும் - நான் க்ஷத்திரியன்

தோல்விகள் என்றுமே, என் போர்க்  குணத்தை அசைத்ததில்லை...

நான் க்ஷத்திரியன்!....நித்திய க்ஷத்திரியன்!


வெற்றி கிட்டும்  வரை போரிடுவேன். ஒரு நாள் நிச்சயம் ஜெயித்துக் காட்டுவேன்...

மற்றவர்கள் என்னை வியந்து பார்ப்பதுற்கு அல்ல....

பாராட்டுவதற்கு அல்ல...

அவமதித்தவர்கள், மதிப்பதற்காக அல்ல ...

யாருக்கும் என்னை நிரூபிப்பதற்காக அல்ல.....

போர் எனது தொழில். அது தான் என் இன்பம், அது தான் என் தர்மம் 


நான் போராடிக் கொண்டே இருப்பேன். 

ஜெயிக்கும் வரை மட்டும் அல்ல ....

உடலில் உயிர் உள்ள வரை......

நான் க்ஷத்திரியன்!....நித்ய க்ஷத்திரியன்! 



நம்பிக்கைதான் வாழ்க்கை 

பத்துவிதமான இலட்சியங்கள் 





Post a Comment

 
Top