April 14, 2025 04:33:44 AM Menu
 

ஜல்லிக்கட்டு  எங்கள் பிறப்புரிமை 

குட்டக்  குட்ட குனிபவனா தமிழன்?

ஆம், அது கொஞ்சம் அப்படித் தான்;

'குனிவது அச்சத்தினால்' என்று தப்புக் கணக்குப்

போடுகின்ற 'அறிவுஜீவிகள்' எல்லாம்

அதிர்ச்சியாகி உறைவர் அவன் வீரம்  கண்டு;

தமிழன் 'சாது' தான், அவன் மிரண்டால் நாடு தாங்காது என்பது தானே நிதர்சனம்?

தூங்குகின்ற  சிங்கம் அவன்; சீண்டிப் பார்த்து விட்டவர்கள்

இன்று  விழி பிதுங்கி நிற்கின்றனர் நிலை புரியாமல் 

தமிழனின் இன்றைய எழுச்சி, உலகையே

உற்றுப் பார்க்க வைத்தது நிஜம்!

  வங்கக் கடலை சிறிதாக்கியது எங்கள் தமிழ்

 இளைஞர்களின் மனித கடல். அவர்களின்

வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறேன்.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! 

வாழ்க தமிழ்! வெல்க  தமிழன்!


நம்பிக்கை தான் வாழ்க்கை 


நேர்மையானவர்கள் இருக்கின்றார்களா?

20 Jan 2017

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top