நல்லது எது? கெட்டது எது? இதை வரையறுப்பது கடினம். எனக்கு நல்லதாகப் படுவது வேறொருவருக்கு கெட்டதாகப் படலாம். கடும் குளிர் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு 'சிகப்பு ஒயின்' , 'விஸ்கி' போன்றவை அத்தியாவசியமான பானங்களாக இருக்கின்றது. அதாவது,மது அருந்துதல் அங்கு நிச்சயம் கெட்ட பழக்கம் அல்ல. ஆனால் இந்தியாவில் அதே பழக்கம் கெட்டதாகக் கருதப்படும். நல்ல அல்லது கெட்ட பழக்கம் என்று ஒன்றை எப்படி நிர்ணயம் செய்வது? மிகவும் எளிது. எவையெல்லாம் உங்கள் உடலுக்கோ அல்லது மனத்துக்கோ கெடுதல் செய்கின்றனவோ, அவை எல்லாம் கெட்ட பழக்கங்களே.
எவை நம் உடலுக்கு அல்லது மனதிற்கு நல்லவை, எவை தீங்கு செய்பவை என்பதை அறிய ஒரு அறிவு வேண்டும். இந்த அறிவைப் பெறுவது இன்று சற்று சிரமம் தான். காரணம், விளம்பரதாரர்கள் தான். அவர்கள் தங்கள் பொருட்களை விற்பதற்காக தவறான கருத்துக்களை மக்களிடம் எளிதில் பரப்பி விடுகிறார்கள். சற்றே ஆராய்ந்து பார்த்து எவை நல்லவை எவை கெட்டவை என்பதை அன்னம் போல் பிரித்து அறியப் பழக வேண்டும்.
எது கெட்டது என்பதை அறிந்தால் மட்டும் போதுமா? அதை விலக்கும் மன உறுதி வேண்டும் அல்லவா? எத்தனையோ பேருக்கு, புகைப் பிடித்தல், மது அருந்துதல், பலபேருடன் உறவு கொள்ளுதல் தவறு என்று நன்றாகத் தெரியும். தெரிந்தும், மனக்கட்டுப்பாடு இல்லாததால் உடல் ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் கெடுத்தக் கொள்ளுகிறார்கள் அல்லவா?
நல்ல உணவு, சுத்தமான உடை, காற்றோட்டமான வீடு இவை அடிப்படைத் தேவைகள் ஆகும். நல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் மிகவும் அவசியமான விஷயம் ஆகும். எண்ணங்கள் தாம் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்றால் அது மிகையாகாது. நல்ல இலக்குகள், விடா முயற்சி, கடின உழைப்பு இவையும் அவசியமே. யோகா மற்றும், தியானம் உங்கள் வாழ்வை மேம்படுத்த மிகவும் உதவும் என்பதில் ஐயமேயில்லை.
ஆக, எவை நல்லவை, எவை கெட்டவை என்பதை அறியும் தெளிவு வேண்டும். மேலும் நல்லவற்றைக் கடைப் பிடிக்கும் மன உறுதியும் வேண்டும். இரண்டும் இருந்து விட்டால் நீங்ககள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சர்வ நிச்சயம்.
வாழ்க வளமுடன்!.
காமத்தை கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?
உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வு

Post a Comment