கதவுகள் இல்லாத பாரத வீடுகள்
எல்லோருக்கும் குடியிருக்க வீடும், மானத்தைக் காக்க உடையும்
மூன்று வேளை உணவும் கிடைத்து விட்டால் வீடுகளுக்கு, கதவுகள் எதற்கு?
கதவுகளுக்குத் தான் பூட்டுகள் எதற்கு?
"ஆனால், அது எப்படி சாத்தியம்?" என்கின்ற உங்கள் கேள்வி எனக்குக்
கேட்கத்தான் செய்கின்றது.
கனவு காண்பது எளிதுதானே? இதோ என் கனவு.
சுவிஸ் வங்கிகளில் உறங்கி கொண்டிருந்த சில பல இந்தியரின் பணமெல்லாம் இந்தியா வந்து விட்டது. அரசியல்வாதிகளின் முறையற்ற பணமெல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொண்டது.
பெரும் தொழிலதிபர்கள், பெரிய வணிகர்களெல்லாம் எல்லோரும் வரிகளை சரியாக செலுத்துகின்றார்கள்.
விவசாயம் மற்றும் தொழில் இந்தியாவில் செழித்துக் குலுங்குகின்றது.
சுற்றி வளைப்பானேன்? ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன்.
பாரத அரசியவாதிகள் எல்லோரும் நேர்மையைக் கடை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா "சூப்பர் பவர்" ஆகி விட்டது.
என் கனவு என்றாவது நனவாகுமா? கடவுள் தான் அறிவார்.
அப்படி ஒரு அற்புதம் நடந்தால், பாரத வீடுகளில் கதவுகள் இல்லாமல் போகலாம், மராட்டிய மாநிலத்தில் உள்ள "சிங்னாபூர்" என்ற கிராமத்தில் இன்றும் இருப்பது போல். அவர்கள் "சனி பகவான்" பாதுகாப்பான் என்கின்ற நம்பிக்கையில் 300 ஆண்டுகளாக கதவுகள் இல்லாமல் வாழ்கின்றார்கள்.
நேர்மை மற்றும் மனித நேயம் மட்டும் நம்மிடம் இருந்து விட்டால் சனி பகவான் உதவி இல்லா விட்டாலும், நம்மாலும் கதவுகளும், பூட்டுகளும் இல்லாத வீடுகளில் வாழ முடியும் தானே?
வாழ்க பாரதம்!
Post a Comment