.தெரிந்தோ தெரியாமலோ நாம் இயற்கையைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டோம். உலமே இன்று செயற்கைவசமாகிப்போய் விட்டது, இவ்வுலகம் இன்று பொருள் சார்ந்து இயங்கி வருகிறது. பணம், பதவி மற்றும் புகழ் மட்டுமே பிரதானமாகிப் போன இந்த நவீன உலகத்தில் உடலும், உள்ளமும் உற்சாகமாய் முன் செல்ல, ஆன்மா வெகுவாக பின் தங்கி விட்டது. இருப்பினும், இன்றும் ஆன்மாவைத் தொடும் சில அற்புத விஷயங்களும் இருக்கத்தான் செயகின்றன. ஆன்மாவைத் தொடும் அந்த அற்புத விஷயங்கள் தான் என்ன? மேலே படியுங்கள்......
ஆன்மாவைத் தொடும் (Soul Touching) அந்த விஷயங்கள் எவை என்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா? நாம் செய்யும் செயல்கள் யாவும், பொருள், காமம், புகழ் சார்ந்தே இருக்கிறது. சுயநலம் எங்கும் தலை விரித்து ஆடுகின்றது. 'ஆன்மா' என்று ஒன்று இருப்பதையே இன்றைய சமுதாயம் சுத்தமாக மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.
தாயின் அன்பு என்பது ஆன்மாவைத் தொடும் ஒரு சிறந்த முயற்சியாகத் தெரிகிறது. ஒரு சில தாய்மார்களின் அன்பு ஆன்மாவைத் தொடும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அதை விட்டால், பரஸ்பர ஆன்மாவைக் கண்டு கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் (Soulmates) இணையும் அற்புதத்தை சொல்லலாம்.
ஒருவன் தான் செய்யும் தொழிலைதெய்வமாக நினைத்து, அதில் தன் உயிர், பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணித்து, மிகுந்த மகிழ்வுடனும், நிறைவுடனும் அத்தொழிலை செய்யும் போது அது ஆன்மாவைத் தொடும் அற்புதமாகி விடுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவன் மிகுந்த சிரத்தையுடன், இறைவனை தியானிக்கும் போது, அது ஆன்மாவைத் தேடும், தொடும் அற்புதமாகி பரிமளித்து விடுகிறது.
வாழ்க வளமுடன்!
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.