இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சில "பலம்" களும் , சில "பலவீனங்கள்"ளும் இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. நீங்கள் எந்தெந்த விஷயங்களில் திறமை பெற்று இருக்கின்றீர்களோ அந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் பலம் ஆகும். எந்தெந்த  திறமைகளில் நீங்கள் குறைந்து இருக்கின்றீர்களோ  அவையே உங்கள் பலவீனங்கள். நீங்கள் "நகைச்சுவையுடன் பேசக்கூடியவர்",  ஆயின் அதுவே உங்கள் பலம் என்று சொல்லலாம். யாரிடமும், எந்த உதவியும் கேட்க தயங்கும் நபர் நீங்கள் என்றால், அதுவே உங்கள் பலவீனம் எனலாம். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மேண்டுமென்றால், நிச்சயம் உங்கள் பலவீனங்களை ஒழித்தாக வேண்டும். உங்களால் பலவீனங்களை முற்றிலும் அழிக்க முடிய வில்லையென்றால், குறைந்தபட்சமாக, உங்கள் பலகீனத்தை  பலவீனமாவது படுத்துங்கள். மறுபுறம், உங்கள் பலங்களை மேலும் வலுப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம். மேலே படியுங்கள்.....



ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொருவிதமாக இருக்கின்றான், அவனது கையில் இருக்கும் ரேகை போல். நல்ல திறமைகள், வாழ்க்கையில் வெற்றி பெற பெரிதும் உதவுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே சமயம், சில பலவீனங்கள் வெற்றிக்கு பெரும் தடைகளாக இருக்கின்றன என்பதையும் மறுக்க இயலாது. ஒரு சிலர், குடிப் பழக்கத்தால், வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றார்கள். இங்கே "குடி' அவர்களது பலவீனமாகிறது.

ஒரு சிலர் வெறும் பேச்சுத் திறமையினால் பெரும் உயரங்களை தொட்டு விடுகிறார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் பெரும் தலைவர்களாக உருவெடுத்ததற்கு அவர்களது பேச்சுத் திறமையை முக்கிய காரணம் ஆகும். பேச்சுத் திறமை" தான் அவர்களது "பலம்" என்றால் அது மிகையாகாது.

சுருங்க சொல்லவேண்டுமென்றால், நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், நமது பலங்களை  பலப்படுத்த வேண்டும். பலவீனங்களைப்  பலவீனப்படுத்த வேண்டும்.

ஒரு சிலர் அர்த்தமற்ற, தேவையற்ற பயங்களை கொண்டிருப்பார்கள். நான் பெரிய தைரிய சாலிகள் என்று நினைத்திருந்த சிலர் அற்ப விஷயங்களுக்கு பயப்படுவதை பார்த்திருக்கின்றேன். அந்த விஷயங்கள் அவர்கள் முன்னேற்றத்திற்கு எப்படி முட்டுக்கட்டையாக விளங்குகின்றன என்பதையும் உணர்ந்திருக்கின்றேன்.

முயன்றால், நமது எந்த பலவீனத்தையும் நம்மால் பலவீனப்படுத்த முடியும் என்பது நிஜம்..

உங்கள் பலங்களை  பலப்படுத்துங்கள்; பலவீனங்களை பலவீனப்படுத்துங்கள். வாழ்க்கை உங்களுக்கு எளிதில் வசப்படும்.

வாழ்க வளமுடன்!

நேர்மையானவர்கள் இன்று இருக்கின்றார்களா?

நம்பிக்கை தான் வாழ்க்கை

Post a Comment

 
Top