இந்த உலகில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவான விஷயம் ஒன்று உண்டு என்றால் அது காம உணர்வு தான் என்று சொல்லலாம்.
உயிரினங்கள் இவ்வுலகில் உலவி வருவதால் தான் இந்த உலகமே உயிர் துடிப்புடன் இயங்கி வருகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. மனிதனுக்கும் காம உணர்வுகள் மிகவும் முக்கியமானவை. அவற்றை நாம் அலட்சியப்படுத்த முடியாது. காம உணர்வுகள் எத்தனையோ பேரின் வாழ்வை முற்றிலும் அழித்திருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. காமத்தை எப்படி கையாள்வது? காம உணர்ச்சியை அடக்க வேண்டுமா?காம வேட்கையை அடக்க முடியுமா? மேலே படியுங்கள்...........
காம உணர்வுகளை அடக்குவது என்பது எளிதல்ல. பெரிய மனிதர்கள், துறவிகள், மன வலிமையுடையவர்கள் கூட காமத்திற்கு அடிமையாகி விடுவதை நாம் பார்க்கின்றோம். அதனால், காமத்தை அடக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பது தெளிவாகிறது.
காம உணர்வுகள் என்பது இயற்கையானது. சரியான வயதும் நேரமும் வரும் வரை, நாம் சற்று காம உணர்வுகளை உதாசீனப் படுத்த வேண்டும். ஆம், நாம் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கூடாது. ஒரு விஷயத்தை நீங்கள் கட்டுப்படுத்த முயற்சி செய்தால் சிறிது காலம் கழித்து அது விசுவரூபம் எடுத்து உங்கள் மீது அதிக வீரியத்துடன் பாயும். அதனால், நாம் காம உணர்வுகளை உதாசீனப் படுத்த வேண்டும்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால், காமத்தை அடக்கக் கூடாது. பதிலாக, காமத்தை கடக்க முயல வேண்டும். காமத்தை எப்படி கடப்பது? காமத்தை உதாசீனப் படுத்துங்கள். காமத்தை கடப்பதற்கு அது ஒன்று தான் ஒரே வழி.
காமத்தை எப்படி உதாசீனப்படுத்துவது? உங்கள் வேலைகளில் உங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். நல்ல நண்பர்களுடன் நேரத்தை கழிப்பது, தெய்வ வழிபாடு, நல்ல புத்தகங்களை படிப்பது, நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, தியானம் செய்வது போன்றவை, காமத்தை உதாசீனப் படுத்த உதவும்.
காமம் ஒன்றும் அசிங்கம் அல்ல: அது கேவலமும் அல்ல. மாறாக, காமம் புனிதமானது என்றே சொல்ல வேண்டும். ஆனால், சரியான நேரத்தில், சரியான நபருடன் மட்டுமே அனுபவிக்க வேண்டிய அற்புதமான விஷயம் அது. மற்ற நேரங்களில், காமத்தை அடக்க முயற்சிக்காமல், அதை கடக்க முயல வேண்டும்.
காமம் உன்னதமானது தான். புனிதமானது தான். அதற்காக அதிலேயே விழுந்து கிடக்கவும் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே விஷமாகும் போது, இது எம்மாத்திரம்?
காமத்தை அடக்காதீர்கள். அதில் வெற்றி பெறுவது இயலாத காரியம். மாறாக, கடக்க முயலுங்கள். அதாவது காமத்தை தேவைப் படும் பொது உதாசீனப் படுத்துங்கள்.
காம உணர்ச்சியை அடக்க முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது.
வாழ்க வளமுடன்!
வாத்ஸ்யானரின் 'காமசூத்திரம்' ஒரு ஆபாச நூலா?
ஆசை அறுபது நாள் தானா?

Post a Comment