இன்று குரு பெயர்ச்சிக்கு நாம் தேவைக்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட இதழ்கள் தங்கள் வியாபர லாபங்களுக்காக இது போன்ற நிகழ்வுகளை பிரபலப்படுத்தியுள்ளனர் என்றால் அது மிகையாகாது. ஒரு வருடம் குரு இருக்கும் ஒரு நிலையினை வைத்து ஜோதிடம் சொல்லுவது அல்லது அந்த வருட பலன்களை சொல்லுவது என்பது முற்றிலும் சரியாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு சில நிகழ்வுகளை அதுவும் உத்தேசமாக மட்டுமே சொல்லமுடியும் என்ற புரிதல் அவசியம் என்றே நினைக்கின்றேன். இந்த மாதிரி பலன்களை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல பலன்கள் உங்கள் ராசிக்கு சொல்லியிருந்தால் குரு பார்த்துக் கொள்ளுவார் என்று நீங்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கவும் கூடாது. கெடு பலன்கள்  உங்கள் ராசிக்கு சொல்லியிருந்தால் அதற்காக பயந்து கொண்டு முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பதும் கூடாது. 



ஜோதிடம் என்பது  ஓர் அற்புதமான சாஸ்திரம். ஆனால் அதில் துரதிஷ்டவசமாக சில குறைகள் உள்ளன. பல ஜோதிட நூல்கள் பலவிதமான மாற்றுக் கருத்துக்களை  கூறுகின்றன. மேலும், பஞ்சாங்களே  பல உள்ளன. கோட்சார பலன்களை கூறும்போது கூட வாக்கிய பஞ்சாங்கமும் , திருக்கணித பஞ்சாங்கமும் வேறு படுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு ஏற்கனவே சிம்மத்திலிருந்து பெயர்ச்சி ஆகி விட்டார் கன்னி ராசிக்கு. ஆனால், திருக்கணிதம் பஞ்சாங்கத்தின் படி இன்று தான் குரு கன்னிக்கு பெயர்கிறார். 
த  2016 குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள எல்லா ராசிகளுக்கு எப்படி இருக்கும்? 


                                                                          ........(தொடரும்)

Post a Comment

 
Top