நாம் எத்தனையோ நல்ல விஷயங்களை கேட்டோ, படித்தோ, பார்த்தோ தெரிந்து கொள்ளுகிறோம். குறிப்பாக, இணைய தளம் வந்த பின் 'அறிவு' அல்லது ஞானம்' பெறுவது எளிதாகி விட்டது. சுய முன்னேற்றத்திற்கு, அல்லது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எத்தனையோ விஷயங்களை நாம் இப்பொழுது எளிதில் அறிந்து கொள்ளலாம். சரி, அறிவைப் பெற்று விட்டால் போதுமா? அதை நடை முறை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டாமா?  'பயன்படுத்தாத அறிவினால் என்ன பயன்? மேலே படியுங்கள்.....


பொதுவாக, எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெறவே துடிக்கிறோம். எந்த குறிக்கோளும் இல்லாமல் வாழும் மக்களை விட்டு விடுங்கள். அவர்களை கடவுள் காப்பற்றட்டும். வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவர்கள் சுய முன்னேற்றம் சம்பத்தப் பட்ட விஷயங்களை அறிந்து கொள்ள துடிப்பார்கள். அந்த 'சுய வளர்ச்சி'  அறிவைப்  பெறுவதற்கு பலவழிகளில் முயற்சி செய்வார்கள்.  சரி, ஓரளவிற்கு அந்த அறிவைப் பெற்று விட்டீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த அறிவைப் பெற்றதனால் மட்டுமே நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட முடியுமா? நிச்சயம் முடியாது. அந்த அறிவை நடை முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.

நம்மில் பலருக்கு அந்த அறிவே இருப்பதில்லை. அப்படியே அந்த அறிவைப் பெற்றிருந்தாலும், அதை பயன்படுத்துவதில்லை என்பதே கசப்பான உண்மை.

உதாரணமாக, காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் (அதாவது பிரம்ம முகூர்த்தத்தில்) எழுவது மனதிற்கும், உடலுக்கும் நல்லது என்கின்ற அறிவை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால், உங்களால் காலை அந்த நேரத்தில் எழ முடிய வில்லையென்றால் (சோம்பேறிரித்தனம் தான் காரணம் பெரும்பாலும்) அந்த அறிவினால் என்ன பயன்? உடலுக்குக் கெடுதல் என்று தெரிந்தும் புகைப் பிடிப்பது, மது அருந்துவது, உடல் ஒழுக்கம் இல்லாமல் வாழ்வது என்று இருக்கிறோம். தவறான உணவுப் பழக்கங்களுடன் வாழ்கிறோம்

கடினமாக உழைக்க தயங்குகிறோம். பிறருக்கு உதவிட யோசிக்கிறோம். பொறாமையையும், வஞ்சத்தையும், கங்காரூ தன்  குட்டியை சுமப்பது போல் சிரத்தையுடன் சுமக்கின்றோம். மன்னிக்க மறுக்கின்றோம்.

இப்படி படித்த முட்டாளை இருப்பதை விட படிக்காத பாமரனாய் இருப்பது சிறந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எப்படி வாழ்வது என்கின்ற அறிவும் வேண்டும். அதை நல்ல முறையில் பயன் படுத்தவும் வேண்டும். பயன்படுத்தாத அறிவினால் என்ன பயன்? எந்த பயனுமில்லை என்றே தோன்றுகிறது. 'போதி' மரத்தடியில் சித்தார்த்தன் ஞானம் பெற்றார். அதன் படி அவர் வாழ்ந்ததால் 'புத்தர்' ஆனார். 

வாழ்க வளமுடன்!

அதிகமாக பணம் சம்பாதிப்பது தேவை தானா? 

நேர்மையானவர்கள் இன்று இருக்கின்றார்களா?

Post a Comment

 
Top