மனிதனுக்கு தன் வருங்காலத்தை அறிவதில் அதிக ஆர்வம் இருப்பதால் தான் ஜோதிடம் நம் "சூப்பர் ஸ்டார்" போல் எப்பொழுதும் மவுசோடு இருக்கின்றது. பண்டைய ஜோதிட சாஸ்திரம் ஒரு அற்புதமான கலை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே நினைக்கின்றேன். இன்று, ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலரோ, அது ஒரு எமாற்றுகிறவர்களின் வயிற்று பிழைப்பு என்கின்றார்கள். ஜோதிடத்தில் ஒன்றுமே இல்லை என்றால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அது ஜீவித்திருக்க முடியாது அல்லவா? இன்றைய ஜோதிடம் பற்றியும் அதன் சில பல நெருடல்கள் பற்றியும் இந்த வலைப் பதிவில் காண்போம். மேலே படியுங்கள்.....
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புலிப்பாணி, போகர், அகத்தியர் போன்ற சித்தர்களும் முனிவர்களும் தான் தங்களின் ஞான திருஷ்டியால் இந்தக் கலையை கண்டு பிடித்து உலகிற்கு அருளினார்கள். ஜோதிட நூல்கள் எல்லாம் பனை ஓலைகளில் செய்யுள் வடிவில் எழுதப்பட்டவை தான். ஒவ்வொரு 300 ஆண்டுகள் கழித்து வேறு ஓலைகளில் நகல்கள் எடுத்து இன்று வரை சில நூல்கள் பிழைத்து வந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு முறை நகல்கள் எடுக்கும் போதும் சில பிழைகள் நடந்திருக்கலாம் என்பது எதார்த்தம். இது ஒரு குறைபாடு. அன்றைய மொழிக்கும் இன்றைய மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் வந்து விட்டன. எனவே, செய்யுளுக்கு அர்த்தம் சொல்லும்போது தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும் பண்டைய ஜோதிட நூல்களிலேயே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இன்றைய ஜோதிடர்களோ ஆளாளுக்கு ஒரு பலன் சொல்லுகின்றார்கள் -ஒரே ஜாதகத்திற்கு. மேலும், பஞ்சாங்கத்திலேயே பல குளறுபடிகள் உள்ளன. வாக்கிய பஞ்சாங்கமும், திருக்கணித பஞ்சாங்கமும் முரண் படுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஜோதிடம் இன்று நிறைய பேருக்கு பிழைப்பாகி விட்டதனால் ஒவ்வொரு ஜோதிடரும், எண் கணித நிபுணரும், வாஸ்து நிபுணரும் ஒவ்வொரு புது உக்தியை பயன்படுத்தி மக்களைப் பயமுறுத்தி பணம் கரக்கின்றார்கள் என்பது தான் ஒரு கசப்பான நிஜம்.
ஜோதிடம் என்றுமே பொய்க்காது. ஜோதிடர்கள் தான் பொய்க்கின்றார்கள்.
ஆக, கூட்டிக் கழித்துப் பார்க்கையில் ஜோதிடத்தை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்தலாம். ஆனால், அதற்குள் முழுகி விடக் கூடாது. அதையே நம்பி எல்லா காரியங்களை செய்யக் கூடாது என்பது தான் என் கருத்து.
15 எளிய வாஸ்து பரிகாரங்கள்
சுக்கிர பகவான் படுத்தும் பாடு

Post a Comment