இந்த கலியுகத்தில் பணம் தான் பிரதானமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. பணத்தினால் இன்று அம்மா அப்பா தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் வாங்க முடியும் என்றே தோன்றுகிறது. பணம் தான் இன்று உறவுகளையும், காதலையும், சந்தோஷத்தையும், ஆரோக்கியத்தையும்,  ஏன் அமைதியையும் கூட தீர்மானிக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த உலகம் செல்வந்தர்களுடையது என்பது தான் நிஜம். பணக்காரன்தான் தான் இங்கு எல்லா இடங்களிலும் மதிக்கப் படுகிறான். பணம் இல்லாதவன் எங்கும் அவமதிக்கப் படுகிறான். பணம் இல்லாதவன் என்ன பிணமா? மேலே படியுங்கள்.....


தெரிந்தோ தெரியாமலோ இன்று பணத்திற்கு மிகப் பெரிய மரியாதை வந்து விட்டது. அதை யாரும் மறுக்க முடியாது. உயரிய குணங்களுக்கும் பண்புகளுக்கும் மவுசு குறைந்து விட்டது.

பண்டையக் காலங்களில் முனிவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக திகழ்ந்தார்கள். அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள். இன்றைய போலி சாமியார்கள் மற்றும் குருமார்கள் போல் இல்லை அவர்கள். அதனால்  அவர்கள் அரசர்களை விட மதிப்பு மிக்கவர்களாக விளங்கியதில் வியப்பு  இல்லை. ஆனால் இன்று பணம் இல்லாதவனை பைத்தியக்காரன் கூட மதிக்க மாட்டான் என்பதே உண்மை.

நாம் நம் பிள்ளைகளை பணத்தை சம்பாதிக்கும் குறிக்கோள்  போதித்தே வளர்க்கிறோம். நம் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் அவசியம் தான். ஆனால் அந்த பணமே நமக்கு பிரதானமாகி விட்டது இப்பொழுது-பிழைக்க வந்த வெள்ளையன் நம்மையே அடிமைப் படுத்தியது போல்.

பணம் இல்லாதவனுக்கு இன்று வாழ்க்கையே இல்லை என்றே சொல்ல வேண்டும். அழகான வாலிபன், நல்ல குணங்கள் உடையவன், எல்லோருக்கும் உதபுபவன், ஆனால் வேலை இல்லாதவன் என்றால் அவனுக்கு இன்று பெண் யாராவது கொடுப்பார்களா? சம்பாதிக்க முடியாத கணவனை மனைவியாவது இன்று மதிப்பாளா? பிள்ளைகள் மதிப்பார்களா? சமுதாயம் மதிக்குமா?

ஆக, நன்றாக சம்பாதிக்கத் தெரிந்த, செல்வந்தர்களே பெரும்பாலும்  வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

பணம் இல்லாதவன் பிணத்திற்கு ஒப்பாகத் தான் சமுதாயத்தில் பார்க்கப் படுகின்றான்.

வாழ்க வளமுடன்!

உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வு தான் என்ன?

சுக்கிர தசை எல்லோருக்கும் பணத்தை தருமா?


Post a Comment

 
Top