வரலாறு காணாத கன மழையால் தமிழகமே இன்று வெள்ளத்தில் மிதக்கிறது. சில குடும்பங்களில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் பலர் வீடு இழந்து, பொருள் இழந்து பரிதவித்து வருகின்றனர். மின் இணைப்புகள்  துண்டிக்கப் பட்டிருந்தன. 'நெட்வொர்க்' சரி இல்லாததால் அலைபேசிகள் மூலம் பேச முடியவில்லை.  வங்கியில் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் பசியால் துடித்தனர் வெள்ளம்  சூழ்ந்த வீட்டினில் இருந்தவர்கள். எத்தனையோ பேர் மரண பயத்துடன் இரவுகளை கழித்தனர் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல்.



வெள்ளத்தினால் இப்படி பேரிழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு சில விஷமிகள் வீண் வதந்திகளையும், பீதியையும் இணையத்தில் பரப்பும் நாச வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஏற்கனவே அச்சத்தில் உறைந்திருந்த மக்களை மேலும் பீதிக்குள் ஆக்கினர் இந்த மாபாவிகள்.
'நாசா' கொடுத்த எச்சரிக்கை என்று கீழ்க் கண்ட செய்தியை அவர்கள் இணையத்தில் பரப்பினார்கள். அதாவது சென்னையில் 250 செ.மீ மழை  பெய்யும் என்றும் சென்னை மாநகரமே நீருக்குள் மூழ்கும் என்றும் 'நாசா' கூறியதாக அந்த விஷமிகள் வதந்தியை வேகமாக பரப்பினர். கெட்ட விஷயங்கள்  எப்பொழுதும் காட்டுத் தீ போல் வேகமாக பரவும்.  இந்த செய்தியும் லட்சக்கணக்கான சென்னைவாசிகளை மிரள வைத்தது நிஜம். பல இலட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

ஒரு பெரிய இயற்கை சீற்றம் நடந்திருக்கிறது. அதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்யா விட்டாலும் பரவாயில்லை. இந்த மாதிரியான வதந்திகளை பரப்புவது என்பது எவ்வளவு கொடுமை? எத்தனை பேர் தாங்க முடியாத மன அழுத்தத்தால் அவதி பட்டார்களோ? எத்தனை பேர் இந்த செய்தி கேட்டு அச்சத்தில் மரணித்தார்களோ? 'நரகம்'  என்று ஒன்று உண்மையில்  இருந்தால் இந்த  கொலைகாரப் பாவிகள் அங்கு செல்லுவது உறுதி.

தேவை இல்லாமல் மக்களை பயமுறுத்தும் வண்ணம் செய்திகளை பரப்புவது கிரிமினல் குற்றம்.  அந்த மாதிரியான வதந்திகளைப் பரப்பும் விஷமிகளுக்கு அரசு கடும் தண்டனைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

இந்த வெள்ளம் வீடுகளை மட்டும் அடித்து செல்ல வில்லை. இந்து, முஸ்லிம் என்று வேறு பட்டு கிடந்த மக்களின் வேறுபாடுகளையும் ஒற்றுமையின்மையையும் அடியோடு அடித்து சென்று விட்டது என்பதே நிதர்சனம்.

சென்னை இந்த பேரழிவிலிருந்து மீளும் பீனிக்ஸ் பறவை போல்.

வாழ்க இந்தியர்களின் ஒற்றுமை! வெல்க பாரதம்!

நம்பிக்கை தான் வாழ்க்கை 

நேர்மையானவர்கள் இன்று இருக்கின்றார்களா?

Post a Comment

 
Top