"உலமே ஒரு நாடக மேடை. எல்லா ஆண்களும் பெண்களும் நாடகத்தில் நடிக்கும் நடிகர்களே"  என்று சொன்னார்  வில்லியம் ஷேக்ஸ்பியர். அது ஓரளவு உண்மை தான் என்றே தோன்றுகிறது. இவ்வுலகில் "நாம் எல்லோரும் சிறப்பாக நடிக்கின்றோம்" என்கின்றார்கள் வெளிப்படையாக பேசுகின்ற சிலர். நாம் எல்லோரும் நடிகர்கள் தானா? நடிக்காமல் வாழவே முடியாதா? மேலே படியுங்கள்....


பிறக்கும் குழந்தை உண்மையாக நேர்மையாகவே இருக்கின்றது. 'அதற்கு நடிக்கத் தெரியாது' நம் சிலம்பரசன் சொல்லுவது போல். ஆனால் அந்த  குழந்தை பெரியவர்களைப் பார்த்து தான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுகிறது-நடிப்பையும் சேர்த்து தான். இவ்வுலகில் நாம் எல்லோரும் நடிக்கின்றோம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒரு சிலர் மிதமாக சில தவிர்க்க முடியாத முக்கிய தருணங்களில் மட்டும் நடிக்கின்றனர். பலர் ஒரு சில நேரங்களில்  மட்டுமே இயல்பாக உண்மையாக இருக்கின்றனர். எதற்காக மனிதன் அப்படி நடிகர் திலகம் போல் நடிக்கின்றான் நிஜ வாழ்க்கையில்?

பொதுவாக மக்கள் தங்களை நல்லவர்கள் போல் சமுதாயத்தில் காட்டிக் கொள்வதற்காகவே அதிகம் நடிக்கின்றனர் என்று நான் நினைக்கின்றேன்.. அவர்கள் தங்களின் உண்மையான உணர்வுகளை அப்படியே வெளிப்படையாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் மற்றவர்கள்  அவர்களை கெட்டவர்கள் என்று நினைத்து விடக்கூடும் என்று நினைப்பதாலேயே அவர்கள் நடிக்க வேண்டியிருக்கிறது எனலாம். ஒரு சிலர் தாங்கள் செய்த தவறுகள், தப்புகள் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக நடிக்கின்றனர்.

கணவன் மனைவிடம் நடிக்கின்றான். மனைவியோ கணவனையே மிஞ்சும் அளவுக்கு மிகவும் இயல்பாக நடிக்கின்றாள். ஒரு சில இடங்களில் நல்ல விஷயங்களுக்காக கூட நடிக்க வேண்டியிருக்கின்றது. புது மனைவி 'நான் அழகா இருக்கின்றேனா' என்றால் எந்த கணவன் 'இல்லை' என்பான்? குழந்தை 'நான் நன்றாக வரைந்து இருக்கின்றேனா' என்று  ஒரு கிறுக்கலை நம்மிடம் காண்பிக்கும் போது நாம் ' 'சூப்பர்' ஆக இருக்கிறது என்று சொல்லுவதில்லையா?

மொத்தத்தில் நாம் எல்லோரும் நடிக்கின்றோம் என்பது உண்மை தான். ஆனால் அது  ஒரு அளவோடு இருக்க வேண்டும். 5000 ரூபாய் வாங்கி கொண்டு 5 லட்சத்திற்கு நடிக்க கூடாது. 'ஆஸ்கார்' விருது வாங்கும் அளவுக்கு நடிக்கக் கூடாது என்று மட்டும் சொல்லி முடிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

நேர்மையானவர்கள் இன்று இருக்கின்றார்களா?

நேரம் இல்லை என்பது கடைந்து எடுத்த பெரிய பொய்யா?








Post a Comment

 
Top