இன்றைய நவீன உலகில் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக  குறைந்து கொண்டு வருகின்றது என்பது  உண்மை. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10  எளிய இயற்கையான வழிகள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். மேலே படியுங்கள்.....


முதலில் நோய் எதிர்ப்பு சக்தி ஒருவருக்கு ஏன் குறைவாக இருக்கிறது என்பதை பார்க்கலாம். தவறான உணவு பழக்க வழக்க முறைகள், மற்றும் பிற தீய பழக்க வழக்கங்கள் காரணமாக ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். சத்து குறைவான உணவுகள் உட்கொள்ளுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படலாம். இரவில் அதிக நேரம் கண் முழித்தல், புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களாலும் ஒருவருக்கு இந்த குறைபாடு வரக் கூடும். ஒரு சிலருக்கு இயற்கையிலேயே இந்த குறைபாடு இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

சரி, இப்பொழுது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் எளிய வழி முறைகளைப் பற்றி பார்க்கலாம். 

1. பூண்டு பச்சையாக ஒன்று அல்லது இரண்டு பல் உணவுடன் கலந்து சாப்பிடவும். வெறுமனே சாப்பிட்டால் சிலருக்கு வயிற்றிற்கு ஒத்துக் கொள்ளாது. உதாரணமாக, இட்லி மிளகாய்ப் பொடியுடன் சேர்த்து சாப்பிடலாம்.  அல்லது மதிய உணவுடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம்.

2. சாம்பார் வெங்காயம் பச்சையாக சாப்பிடலாம்.

3. பெரிய நெல்லிக்காய் தினமும் சாப்பிடலாம். 

4. மாதுளை போன்ற பழங்கள் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

5. இயற்கை உணவை முடிந்த மட்டிலும் எடுத்தக் கொள்ளுங்கள். ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கி சாப்பிடவும்.

6. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூங்குங்கள்.

7. எளிய உடற் பயிற்ச்சி அல்லது யோகா பயிற்சி செய்யுங்கள்.

8. தியானம் அனு  தினமும் செய்யுங்கள்.

9. பச்சை வேர்கடலை, மற்றும் தேங்காய் சாப்பிடுங்கள். பாதாம் பருப்பும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

10. தேவை இல்லாத மன அழுத்தத்தை தவிர்த்து விடுங்கள். எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களை மனதில் ஓட விடுங்கள்.

வாழ்க வளமுடன்!

உங்கள் தொப்பையை குறைக்க 15 எளிய வழிகள் 

வெண்மையான பற்களைப் பெறுவது எப்படி?




Post a Comment

 
Top