ஆசை அறுபது நாள்  மோகம் முப்பது நாள் என்று தமிழில் ஒரு பழமொழி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. திருமணமான   புதிதில் தம்பதியிடையே இருக்கும்  அந்த  ஆசை மற்றும் அன்னியோன்யம் சில ஆண்டுகள் சென்ற  பின் இருப்பதில்லை. ஆசை அறுபது நாள் தானா? மோகம் முப்பது நாள் தானா? மேலே படியுங்கள்.............


ஒரு ஆணும் பெண்ணும் காதல் வயப் பட்டு பழக ஆரம்பித்த பின் அல்லது திருமணமான புதிதில் ஒருவருக்கொருவர்  அபரிதமான அன்பு காட்டி மகிழ்வர். இறைவன் தன்னைப் படைத்ததே தன துணையுடன் இன்பம் துய்க்கத்தான் என்பது போல் உணர்வார்கள். தனது துணையை ஒரு கணமும் பிரிய மனம் இல்லாதிருப்பர். துணையுடன் இல்லாத நேரம் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகத் தெரியும் அவர்களுக்கு அப்பொழுது. தனது அன்பு கணவன் அல்லது மனைவியுடன் இருக்கும் ஒவ்வொரு இரவும் ஒரு நொடியாக பறந்து செல்லும் அவர்களுக்கு அந்த சமயத்தில் என்பது நிஜம். அந்த அன்பு, ஆசை,  அன்னியோன்யம் ஏன் குறைந்து விடுகிறது சில காலம் சென்ற பின்?

ஆண்டவன் காமத்தை எல்லா உயிர்களுக்கும் வைத்தது இனப் பெருக்கத்திற்காகத் தான் என்றே சொல்ல வேண்டும். ஆனால் காதல் மற்றும் காமம் மனிதனுக்கு வெறும் இனப் பெருக்கத்திற்காக மட்டும் அல்ல. அதையும் தாண்டி ஒரு புனிதம் ஆண்  பெண் உறவில் உள்ளது என்பது உண்மை. மிருகங்களுக்கு காமம் மட்டுமே இருக்கும்/போதும் . ஆனால் மனிதனுக்கு காமத்தைத் தாண்டி காதலும் வேண்டும். 

திருமணமான புதிதில் காமத்தின் கை சற்று உயர்ந்திருக்கும் என்பது இயல்பு தான். காமம் தான் காதலின் நுழைவு வாயில் என்றே சொல்லலாம். காமத்தின் வீரியம் தம்பதியைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து சற்று குறையலாம். அது  தப்பில்லை. ஆனால் அவர்களுக்குள் ஒரு உண்மையான அன்பு அதற்குள் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய தம்பதிகள் பெரும்பாலானோருக்கு அந்த அன்பு இயல்பாக எளிதாக வந்து விடும். அது தான்  நம் பாரத புனித நாட்டின் போற்றர்கரிய பண்பாடாகும்.

ஆசை வேண்டுமானால் நம் நாட்டு தம்பதியியரிடையே காலப் போக்கில் குறையலாம். ஆனால் அன்பு அதிகமாகிக் கொண்டுதானிருக்கும். அது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அது தான் உண்மை.

அந்த ஆசையும் கூட சில தம்பதியர்க்கு கடைசி வரை குறைவேதேயில்லை. அவர்கள் தான் உன்னதமான, உத்தமமான உயிர் தம்பதிகள் என்பேன்.

ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள் என்பது ஓரளவிற்கு உண்மை தான். அது ஒன்றும் குற்றமில்லை என்பதும் உண்மை தான். அந்த அறுபது நாள் கழிந்த பின் அன்பு விஞ்சி  இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அப்படி இல்லையென்றால் அவர்கள் சரியான தம்பதியே இல்லை என்றே சொல்லுவேன்.

வாழ்க வளமுடன்! 

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?

காதலுக்காக வாழ்க்கையைத் தொலைத்தவர் எத்தனைக் கோடி? 



                                                                           

                                                                             

Post a Comment

 
Top