மனம் விசித்திரமானது. அற்புதமானது. அதீத சக்தி வாய்ந்தது. மனதின் சக்தியை நாம் அதிகரிக்க முடியும். மனதின் சக்தியால்  நாம் சாதிக்க முடியாதது என்று எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதே நிஜம். மனதை கட்டுபடுத்துவது மிகவும் அவசியம் என்று பல அறிஞர்கள்  சொல்லுகின்றனர். மனதை நாம் கட்டுப் படுத்தி விட்டால் பல விஷயங்களை சாதிக்கலாம் என்றும்  சொல்லுகின்றார்கள். மனம் நம்மை அடிமை ஆக்கி விட்டால் நாம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வோம். அதனால் நம் வாழ்வு தோல்விகளும், துன்பங்களும் நிறைந்ததாக மாறி விடும் என்கின்றார்கள். தீய பழக்க வழக்கங்களில் சிக்கி சீரழிபவர்கள் மனத்தைக் கட்டுப் படுத்த முடியாதவர்கள் தானே? அது ஒரு புறம் இருக்க, மனதை உண்மையில் கட்டுப்படுத்த முடியுமா? மேலே படியுங்கள்......



மனத்தை கட்டுப் படுத்துங்கள் என்று எல்லா அறிஞர்களும் சொல்லுகின்றார்கள்.  மனதை கட்டுப் படுத்த முடியுமா? அது உண்மையில் சாத்தியமா? மனதின் அளப்பரிய சக்தியின் முன் நாம் எம்மாத்திரம்? அப்பேற்பட்ட விசுவாமித்திரரே மனத்தைக் கட்டுப் படுத்த தவறி விட்டாரே மேனகை காமக் கணையை  அவர் மேல் தொடுத்த போது! அப்படி என்றால் நீங்களும் நானும் எம்மாத்திரம்? மனதின் சக்தி முன் நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்பதே உண்மை. நம் மனது நினைத்தால் நம்மை ஒரு நொடியில் கட்டுப் படுத்தி விட முடியும். நம்மை அடிமை ஆக்கி விட முடியும். பின் எப்படி தான் மனதை நாம் கையாள வேண்டும்? 

நாம் நம் மனதை கட்டுப் படுத்த முயல வேண்டியதில்லை. பதிலாக நாம் நம் மனதுடன் நட்பாக இருக்க பழக வேண்டும். மனம் நம் சிறந்த நண்பனாக மாற வேண்டும். மனம் அராபியக் குதிரை போன்று கட்டுக்கடங்காதது. குரங்கு போல் அது பல விஷயங்களுக்கு தாவும் இயல்பினது.
மனதை அடக்கி ஆள  நினைத்தால் அது தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.  மாறாக மனதை நட்புடன் அணுகினால் நல்ல பலன்கள் கட்டாயம் நடக்கும். மனதை அன்பாக, அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். அனாவசியமான சபலங்களில் ஈடுபடாமல் இருக்க அவற்றை முடிந்த வரையில் தவிர்த்து விடுங்கள்.

வாழ்க வளமுடன்!

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?

உங்கள் மனம் உங்களின் எஜமானனா? அல்லது வேலைக்காரனா?

Post a Comment

 
Top