பணம் வாழ்க்கையில் மிகவும் அவசியம் என்பதில் மாற்று கருத்து இருக்க இடமேயில்லை எனலாம். பணத்தால் நாம் பல சௌகரியங்களை பெற முடியும் என்பதும் உண்மையே. பணத்தால் நாம் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதும் நிஜம் தான். பணத்தால் நாம் பல பொருட்களை வாங்க முடியும். அதனால் வசதியாக வாழ முடியும். பணத்தை வைத்து நாம் வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களையும் வாங்கி விடலாம்  - "உண்மையான அன்பு" போன்ற சில விஷயங்களைத் தவிர. பணம் சம்பாதிப்பது அவசியம் தான். ஆனால், அதிக அளவில் பணம் சம்பாதிப்பது அவசியம் தானா? மேலே படியுங்கள்..........



இன்று வாழ்க்கையில் வெற்றிபெறுவது என்பது அவன் சம்பாதிக்கும் பணத்தைப் பொறுத்து இருக்கின்றது எனலாம். அதாவது ஒருவன் பணம் நன்றாக சம்பாதித்து விட்டால் அவன் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக பெரும்பாலான மக்கள் நினைக்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை ஆகும். பணம் தான் ஒருவனின் வெற்றியை தீர்மானிக்கிறதா?

இன்று பெரும்பாலும் மக்கள் பணம் சம்பாதிப்பதையே பெரிய குறிக்கோளாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலான மக்கள் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் வாழ்கின்றார்கள், நாம் அவர்களை விட்டு விடுவோம். அவர்கள் வெறுமனே சுவாசிப்பவர்கள், வாழ்பவர்கள் அல்லர்.

பணத்தைத் தாண்டி ஓர் உயரிய வாழ்வை ஒரு சிலரே வாழ்ந்திருக்கின்றனர். காந்தி, அன்னை தெரசா, விவேகானந்தர் போன்ற மிகச் சிலரே பணத்தை தாண்டி வேறு உயரிய இலட்சியங்களுடன் வாழ்ந்து வெற்றி பெற்றும் இருக்கின்றனர்.

அடிப்படை தேவைகளுக்கான பணத்தை மனிதன் சம்பாதித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் ஓரளவு சம்பாதித்த பின் அவனது கவனம் மற்றும் ஈடுபாடு பெரிய  விஷயங்களில் இருக்க வேண்டும். தனக்காவும், தன குடும்பத்திற்காகவும் வாழ்ந்த பின் சற்று மற்றவர்களுக்காகவும் வாழலாமே? தன்னலமற்று  பிறருக்கு உதவும் போது கிடைக்கும் இன்பமும், நிம்மதியும் அலாதியானது என்பது அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.

தன்னமற்ற வாழ்க்கையை விட மேலான வாழ்க்கை ஒன்று உள்ளது என்பது மிக சிலருக்கே தெரியும். அது தான் கடவுளை அறிவது ஆகும். முழு ஈடுபாட்டுடன் நீங்கள் பல நாட்கள் அல்லது மாதங்கள் தியானம் செய்தால்  ஒரு கட்டத்தில் நீங்கள் உங்களையே  அறிவீர்கள். உங்கள் வாழ்க்கையின் காரணம் மற்றும் அர்த்தம் அறிவீர்கள். இந்த பிரபஞ்சத்தைப் படைத்த இறை சக்தியை அறிவீர்கள். அந்த இறைவனுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்படும் போது கிடைக்கும் இன்பம் தான் பேரின்பம் ஆகும். அந்த மகிழ்ச்சி, நிம்மதி வேறு எதிலும் இவ்வுலகில் கிடைக்காது என்பது திண்ணம்.

அதிக அளவில் பணம் சம்பாதிப்பது அவசியம் தானா? நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!

உங்கள் கவலைகளுக்கான உண்மையான காரணங்கள் 

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள 20 சிறந்த வழிகள் 

Post a Comment

 
Top