இப்பொழுதெல்லாம் எண் கணிதம் மற்றும் அதிர்ஷ்டக்கல் போன்றவை மக்களிடையே பிரபலமாகி வருகின்றது என்பது உண்மை. ஒவ்வொரு விஷயத்திற்கு ஏற்ப அதிர்ஷ்டக்கல் அணிவதும் அதிகமாகி வருகின்றது என்பது நிஜம். காதல் வாழ்க்கை சிறக்க என்ன மோதிரம் அணியலாம்? காதல் மோதிரம் அணிந்தால் காதல் வாழ்க்கை உண்மையில் ஜொலிக்குமா? மேலே படியுங்கள்.....
ஜோதிடத்திலும் எண் கணிதத்திலும் உள்ள மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால் ஒவ்வொரு ஜோதிடரும் எண் கணித நிபுணரும் வெவ்வேறு பலன்களை கூறுவது தான். மருத்துவத் துறை உள்பட எல்லாத் துறைகளிலும் இந்த குறைபாடு இருக்கிறது என்றாலும் ஜோதிடம் மற்றும் எண் கணித துறைகளில் இந்த குறைபாடு சற்று தூக்கலாகவே உள்ளது என்றே சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
காதல் கை கூட அல்லது காதல் வாழ்க்கை சிறக்க எந்த அதிர்ஷ்டக்கல் அணியவேண்டும்? ஒரு சில ஜோதிடர்கள் சுக்கிரனின் வைரக்கல் அணிந்தால் காதல் வாழ்க்கை சிறக்கும் என்பர். வேறு சிலர் ஏழாம் வீட்டு அதிபதி யாரோ அவருக்குரிய கல்லை அணிய வேண்டும் என்பார்கள். மேலும் ஜாதகத்தில் எந்த கிரகம் யோக கிரகமோ அந்த கிரகத்திற்குரிய கல்லை அணிய வேண்டும் என்றும் சிலர் சொல்லுகின்றார்கள். மேலும் சிலர் உங்கள் பிறப்பு எண் (Birth number) எதுவோ அதற்குரிய கல்லை பரிந்துரைப்பார்கள்.
உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டு அதிபதி மற்றும் சுக்கிரன் இவற்றில் எந்த கிரகம் அதிக பலமாக உள்ளதோ அந்த கிரகத்திற்குரிய கல்லை அணிந்தால் 'அந்த' விஷயங்களில் நல் பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் கல் குறை இல்லாததாக இருத்தல் அவசியம். அதற்கு மேலாக உங்கள் தோற்றம், பழகும் விதம், நகைச்சுவை உணர்வு, பொருளாதாரம், படிப்பு, செல்வாக்கு, விட்டுக் கொடுக்கும் தன்மை போன்றவை தான் உங்கள் காதல் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று சொல்லி முடிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்!
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.