மருத்துவ விஞ்ஞானம் சில விஷயங்களில் தெளிவு இல்லாமல் இருக்கும். உதாரணமாக, சில ஆராய்ச்சியாளர்கள் பால் குடிப்பது நல்லது என்பார்கள். மற்றும் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் பால் குடிப்பது உடலுக்கு கெடுதல் என்பார்கள். 'டார்க் சாக்லெட்' உடலுக்கு நல்லது என்று ஒரு சாராரும், கெடுதல் இன்னொரு சாராரும் சொல்லுவார்கள். அதே போல் டீ குடிப்பது நல்லது என்றும் கெடுதல் என்றும் இரண்டு கருத்த்துகள் நிலவுகின்றன என்பது நிஜம். காபி குடிப்பது நல்லதா? கெட்டதா? மேலே படியுங்கள் .......
தெரிந்தோ தெரியாமலோ இந்தியர்களும் இந்த காபி குடிக்கும் பழக்கத்திற்கு இன்று ஆளாகி விட்டோம் என்பது உண்மை. காலையில் எழுந்ததும் நம்மில் பலர் முதல் உணவாக காபியைத் தான் அருந்துகிறோம். எல்லா விஷயங்களும் நல்லதும் கெடுதலும் கலந்தே இருக்கின்றன. அதே போல் காபி குடிப்பதாலும் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு என்றே நினைக்கின்றேன். காபி குடிப்பதால் ஏற்படக்கூடிய கெடுதல்களை முதலில் பார்ப்போம்.
காபி அதிகம் குடித்தால் பலருக்கு வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாது. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காபி பருகினால் நோயை அதிகரித்து விடும். இதய படபடப்பு உள்ளவர்கள் காபி சாப்பிட்டால் படபடப்பு அதிகரிக்கும். காபி குடித்தால் கணையம் அல்லது சிறுநீரக புற்று நோய் வரும் அபாயம் உண்டு என்றும் சிலர் சொல்லுகிறார்கள். அதிகம் குடித்தால் பித்தம், என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.
காபி குடித்தால் கெடுதல்கள் விளைகின்றன என்று எந்த ஆராய்ச்சியும் சொல்ல வில்லை என்று ஒரு சாரார் உறுதியாக சொல்லுகின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் காபி குடிப்பதால் பல நன்மைகள் உடலுக்கு ஏற்படும் என்றும் அவர்கள் சொல்லுகின்றார்கள். காபி குடித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். பல ஆண்டுகள் காபி குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள். மேலும் கான்சர் நோய் வராமல் தடுக்கும் சக்தியும் காபிக்கு இருப்பதாக சொல்லுகின்றார்கள்.
காபி குடிப்பதால் நன்மைகள் உண்டோ இல்லையோ, ஆனால் நிச்சயம் கெடுதல்கள் இல்லை என்று உறுதியாக சொல்லலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றார்கள். பாலும், வெள்ளை சர்க்கரையும் தான் காபியின் நல்ல குணங்களை அழித்து விடுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தின் கிராமங்களில் பால் இல்லாமல் கருப்பட்டி காபி குடிக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. 3 அல்லது 4 கப் கருப்பட்டி காபி ஒரே சிப்பில் குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்பது நிஜம். 'கடுங்காபி' என்று அந்த காபியை சொல்லுவார்கள்.
காபி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் குடிக்கலாம். ஆனால் பாலும், வெள்ளை சர்க்கரையும் இல்லாமல் குடிக்க வேண்டும். அப்படி குடித்து பழகி விட்டால் நாளடைவில் அந்த சுவையே பிரமாதமாக இருக்கும்.
வாழ்க வளமுடன்!
பால் குடிப்பது நல்லதா? கெட்டதா?
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 15 உணவுகள்

Post a Comment