இன்று உலகம் அதிக அளவில் சுய நலமாகி போனது என்பது நிஜம். மக்கள் உறவுகளுக்கும், அன்புக்கும் முக்கியத்துவம் கொடுத்த காலங்கள் மலையேறி விட்டன. இன்று மக்கள், பணத்திற்கும், பதவிக்கும் தான் மரியாதை கொடுக்கிறார்கள் என்கின்ற கசப்பான உண்மையை யாரும் மறுக்க இயலாது. எல்லோரும் சுயநலமாக இருக்கும் பொழுது, நாமும் கொஞ்சம் சுயநலமாகத் தான் இருக்க வேண்டுமோ? மேலே படியுங்கள்.....
நாம் இன்று கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று பணம் பந்தியிலும் குணம் குப்பையிலும் வாசம் செய்வது உண்மை தான். மக்கள் பணம் வைத்திருப்பவரை மதிக்கின்றார்கள் அவர்கள் தவறான வழிகளில் அந்த பணத்தை சம்பாதித்திருந்தாலும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இன்று அங்கெங்கெனாதபடி எங்கும் பணம் பாய்வதை பார்க்க முடிகிறது.
இன்று குடும்ப உறவுகளிலும் சுய நலம் தலை விரித்தாடுவதை பார்க்கிறோம். கணவன் மனைவிக்குள் கூட இன்று சுய நலம் அதிக அளவில் காணப் படிகிறது. பெற்றோர்களின் அன்பில் மட்டுமே இன்று சுய நலம் கலக்காமல் இருக்கின்றது.
இன்றும் கூட ஒரு சிலர் சுய நலம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இவ்வுலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும், அப்பாவிகள் என்றும், முட்டாள்கள் என்றும் முத்திரை குத்தி கேலி பேசுகின்றனர். அம்மண தேசத்தில் கோமணம் கட்டியவன் கோமாளி தானே?
நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் முற்றிலும் சுயநலமாய் இருக்கும் பொழுது நாம் மட்டும் சுய நலமின்றி இருப்பது நமது முன்னேற்றத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கலாம். அதனால் கொஞ்சம் சுயநலமாகத் தான் இருக்க வேண்டுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
வாழ்க வளமுடன்!
உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க 20 வழிகள்
உங்கள் விதியின் 5 விதிகள்

Post a Comment