நாம் எல்லோரும் இவ்வுலகில் எங்கே போகின்றோம் என்பதைக் கூட அறியாமால் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்றே நான் நினைக்கின்றேன். நாம் யார்? நாம் எதற்காக இவ்வுலகில் வந்தோம்? நமக்கு என்ன தேவை? அதை எப்படி பெறுவது என்ற புரிதல் இல்லாமலே வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்? மேலே படியுங்கள்.....
நாம் எல்லோரும் எப்பொழுதும் இன்பமாக இருக்கவே விரும்புகின்றோம். எல்லா உயிரினங்களும் எப்பொழுதும் இன்பமாக இருக்கவே விரும்புகின்றன. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் நாம் அளவற்ற, நிலையான இன்பத்தையே அடைய விரும்புகின்றோம். ஆனால் நாம் அந்த அளவற்ற நிலையான இன்பத்தை சரியான இடத்தில் தேடுகிறோமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக நம் முன் இப்பொழுது நிற்கிறது. தேன் வேண்டுமென்றால் அதை தேன் கூட்டில் தானே தேட வேண்டும்? இறைச்சிக் கடையில் தேடினால் கிடைக்குமா?
நாம் அனுபவிக்கும் எல்லா இன்பங்களும் நிலையானவை அல்ல. அளவற்றவை அல்ல. நீங்கள் அனுபவிக்கும் இன்பங்கள் என்று பார்த்தால், சாப்பிடுதல், புகை பிடித்தல், மது அருந்துதல், இல்லற சுகம் என்பவை தான் பிரதானமானவை. இவை எல்லாமே ஒரு நிலையில் திகட்டி விடும். உங்களுக்குப் பிடித்த ஐஸ் கிரீம் எத்தனை சாப்பிட முடியும் உங்களால்? அதிக பட்சம் 5 சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடுவது என்பது இன்பமாக இருக்காது அல்லவா? அது பெருந்துன்பமாக இருக்கக் கூடும் அல்லவா? அப்படி என்றால் அது அளவற்ற இன்பமும் அல்ல. நிலையான இன்பமும் அல்ல என்பது தெளிவாகிறது அல்லவா?
அளவற்ற ஆற்றல் மற்றும் நிலையான ஆற்றல் எது? கடவுள் தானே? கடவுள் இடம், காலம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பது நிஜம். இடத்திற்கு அப்பாற்பட்டவர் என்கின்றபோது அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்பது உண்மையாகி விடுகிறது அல்லவா? அப்படி என்றால் அவர் உங்களிடமும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. அளவற்ற இன்பம், நிலையான இன்பம் அனுபவிப்பவர் கடவுள் தான். அவர் நம்முள் இருக்கும் போது அளவற்ற நிலையான இன்பம் நம்மிடம் தான் உள்ளது என்பது புரிகிறது அல்லவா?
நீங்கள் உங்களை அறிந்தால், உங்களிடம் உள்ள கடவுளை அறிந்தால், நீங்கள் அளவற்ற, நிலையான இன்பத்தை அடையலாம். அது தான் பேரின்பம்.
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்? அளவற்ற, நிலையான் பேரின்பம் அடையலாம். அது தான் சொர்க்கம் ஆகும்.
வாழ்க வளமுடன்!
உங்கள் ஆசை பயத்தை மிஞ்சும் போது
எது அர்த்தமுள்ள வாழ்க்கை?

Post a Comment