ஒன்பது கிரகங்களில் குரு மட்டும் தான் முழு சுபக் கிரகம் ஆகும். குருவை 'தேவ குரு' என்பார்கள். குரு பகவான் தேவர்களுக்கெல்லாம் குரு என்பது ஐதீகம். அவரை அந்தணன் என்றும் சொல்லுவார்கள். குரு கிரகம் மக்களின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் நல்ல அல்லது தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது?
குரு செல்வம், குழந்தைபேறு, தெய்வீக சிந்தனை, நாடாளும் யோகம், நீதித் துறை, ஆன்மிகம், நேர்மை, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தொழில், அறிவு, படிப்பு, மந்திரம், தந்திரம் இவற்றை எல்லாம் குறிக்கிறது. குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கல்வி ஸ்தானமான இரண்டாம் வீ ட்டில் பலமுடன் இருந்தால் நீங்கள் சிறந்த கல்விமான் என்று அடித்து சொல்லி விடலாம். குரு 12ஆம் வீட்டில் இருந்தால் கடல் கடந்து வெளி நாட்டில் வேலை செய்வதற்கு வாய்ப்பு அதிகம்.
குரு தான் இருக்கும் வீட்டை விட தான் பார்க்கும் வீடுகளுக்கு அதிக நற்பலன்களை வாரி வழங்குவார். குரு லக்னத்தில் இருந்தால் முக்கியமான வீடுகளான 5ஆம் வீடு, 7 ஆம் வீடு, 9ஆம் வீடுகளைப் பார்ப்பதால் ஜாதகருக்கு சிறந்த பலன்கள் ஏற்படும் என்று உறுதியாக சொல்லாம்.
குரு ஜாதகத்தில் தனித்து நின்றால் கெடுதல் விளைவிப்பார் என்கின்ற கருத்தும் உள்ளது. குருவும் சந்திரனும் சேர்ந்து ஒரு ஜாதகத்தில் நின்றால் அது குரு சந்திர யோகம் ஆகும். இந்த யோகத்தால் நல்ல படிப்பும், நல்ல செல்வமும் ஜாதகர் அடைவார். குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் நின்றால் கஜ கேசரி யோகம் ஆகும். இந்த யோகம் இருந்தால் சிங்கத்தைக் கண்ட யானையைப் போல் உங்கள் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். மேலும் அரசியலில் பிரபலமாகி பெரிய பதவிகள் வகிக்க வேண்டுமென்றால் குரு ஜாதகத்தில் நிச்சயம் பலமாக இருக்க வேண்டும். மேலும் குருவும் கேதுவும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்தால் அது கோடீஸ்வர யோகம் ஆகும். இதன பலன் ஜாதகர் தன் வாழ்நாளில் என்றாவது அதிக செல்வத்தை உறுதியாக அடைவார் என்பதாகும்.
குரு பெயர்ச்சி பலன்கள் என்பது ராசிக்கு குருவின் அமைப்பை வைத்து கோட்சார பலன்கள் பார்ப்பது ஆகும். குரு உங்கள் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் கோட்சாரத்தில் வரும் போது நன்மைகளை வாரி வழங்குவார். ஜாதகருக்கு அத்தருணங்களில் குரு பலம் ஏற்பட்டு திருமணம் சித்திக்க அதிக வாய்ப்புகள் உண்டாகும் எனலாம்.
குருவின் எண் 3. குருவின் அதிர்ஷ்டக் கல் மஞ்சள் புஷ்பராகம் ஆகும். குருவுக்கான கடவுள் தக்ஷிணாமூர்த்தி.
வாழ்க வளமுடன்!
கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள்
செவ்வாய் தோஷம் தமிழர்களை படுத்தும் பாடு
Post a Comment