எதிர்மறை எண்ணங்கள் ஒருவரின் வாழ்க்கையை எளிதில் அழித்து விடும். உங்களின் எதிர்மறை எண்ணங்கள் மற்றவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கக் கூடும் என்பது நிஜம். நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் உடையவரா என்பதை கண்டுபிடிப்பது எப்படி? மேலே படியுங்கள்.......




எதிர்மறை எண்ணங்கள் உடையவர்கள் எப்பொழுதும், 'அது கஷ்டம்', 'இது நடக்காது', 'அதிலே ரொம்ப ரிஸ்க் இருக்கு',  'இது முடியாது' என்று எதிர்மறையாகவே பேசிக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் உடையவரா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் தொட்டதெற்கெல்லாம் புகார் கூறுபவரா? அப்படி என்றால் நீங்கள்  எதிர்மறை எண்ணங்கள் உடையவர் தான்.

நீங்கள் மற்றவர்களையும், உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பாதகமான விஷயங்களைப் பற்றியும் அடிக்கடி குறைக் கூறிக் கொண்டு இருப்பவரா? அப்படி என்றால் நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் உடையவர் தான்.

உலகில் நடக்கும் தீய விஷயங்களைப் பற்றியே நீங்கள் அதிகம் பேசுபவரா? அப்படி என்றால் நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் உடையவர் தான்.

நீங்கள் மற்றவர்களை அடிக்கடி விமர்சனம் செய்பவரா? அப்படி என்றால் நீங்கள் நிச்சயம் எதிர்மறை எண்ணங்கள் உடையவர் தான்.

நீங்கள் உலகில் நடக்கும், பேரழிவுகள், விபத்துகள் பற்றி அடிக்கடி பேசுபவரா? அப்படி என்றால் நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் உடையவர் தான்.

நீங்கள் உங்களை மிகவும் துரதிர்ஷ்டம் பிடித்தவர் என்றும், விதியின் பலிகடா என்றும் அடிக்கடி மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளுகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள்  எதிர்மறை எண்ணங்கள் உடையவர் தான்.

நீங்கள் அதிக பயத்துடன் வாழ்கிறீர்களா? உங்கள் உடல் நலத்தில் நம்பிக்கை இல்லாதவராக திகழ்கிறீர்களா? சுய கௌரவம் இல்லாமலும், தன்னம்பிக்கை இல்லாமலும் வாழ்கிறீர்களா? அப்படி என்றால்  நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் உடையவர் தான்.

உங்கள் எதிர்மறை எண்ணங்களை  களைவது எப்படி?

நேர்மறை எண்ணங்கள் உடையவரிடம் பழகுங்கள்.

கடவுளின் மேல் முழு நம்பிக்கை வையுங்கள்.

தியானம் தினசரி செய்யுங்கள்.


வாழ்க வளமுடன்!






Post a Comment

 
Top