சில சமயங்களில் சிலருக்கு வாழ்க்கையில் சொல்லொண்ணா துன்பங்கள் தொடந்து வந்து வேதனைக்குள்ளாக்கும். பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதை போல், செய் தொழிலில் தோல்வி, குடும்பத்தில் குழப்பம், வழக்கு, வியாஜ்ஜியங்கள் எதிரிகள், நோய் நொடிகள் என்று அத்தனையும் ஒரே நேரத்தில் வந்து உங்களை ஸ்தம்பிக்க வைக்கலாம். இருப்பதை விட இறப்பதே மேல் என்று கூட தோன்றலாம். கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வரும் போது எப்படி சமாளிப்பது? மேலே படியுங்கள்........
முதலில் நீங்கள் புரிந்த கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த உலகில் கஷ்டமே அனுபவிக்காத உயிரினம் என்று ஒன்றுமேயில்லை என்பது தான். உங்களுக்கு ஒரு மாதிரியான துன்பம் என்றால் வேறொருவருக்கு வேறு மாதிரியான துயரங்கள் துளைத்தெடுக்கும். துன்பங்கள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்பதை உணர வேண்டும்.
இதுவும் கடந்து போகும் என்கின்ற சீன பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். எப்பேர்பட்ட சந்தோஷமும் அல்லது துன்பமும் நீண்ட நாட்கள் நீடிக்காது. இரவுக்குப் பின் விடியல் வந்தே ஆக வேண்டும்.
மேலும் நீங்கள் இந்த கடினமான் நேரத்திலும் உங்களிடத்தில் உள்ள நிறைகளையும், திறமைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தினர் உங்களை எவ்வளவு நேசிக்கின்றனர்? உங்களின் தனிப்பட்ட திறமைகள் எவ்வளவு உள்ளன? அதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த இழப்புகளையும் மற்றும் துன்பங்களையும் உங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்புகளாகப் பாருங்கள். நீங்கள் போன ஜென்மங்களில் செய்த பாவங்கள் இப்பொழுது கரைந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உண்மையான நண்பர்களையும், உறவினர்களையும் அடையாளம் கண்டு கொள்ள கடவுள் கொடுத்த வாய்ப்பாக இதைப் பாருங்கள்.
கடவும் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிதானமாக யோசித்து செயல் படுங்கள். கடினமாக உழையுங்கள். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப் படாமல் முன்னேறுங்கள். தியானம் செய்யுங்கள் தினமும். உங்கள் துன்பங்கள் நீங்கும். தோல்விகள் வெற்றிகளாக மாறும். உலகமே ஒரு நாள் உங்களுக்கு வசப்படும்.
வாழ்க வளமுடன்!
நன்றி கேட்ட உலகமடா சாமி
கடவுள் உண்மையில் இருக்கிறாரா?

Post a Comment