நல்லவராக இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால் ரொம்ப நல்லவராக இந்த கலியுகத்தில் இருப்பது சரியாக இருக்குமா? மேலே படியுங்கள்.......


நல்லவர்களை இந்த உலகம் மிகவும் தவறாகவே பயன்படுத்துகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. நல்லவர்களை தங்கள் தேவைகளுக்காக  அளவுக்கதிகமாக  இந்த உலகம் பயன்படுத்த முயல்கிறது. நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் கொடுத்தால் அவர் மீண்டும்  2000 ரூபாய் உங்களிடமிருந்து  எதிர்பார்ப்பார். ஒருவரை நீங்கள் அவர் செய்த தவறை மன்னித்தால் மீண்டும் மீண்டும் அவர் தைரியமாக உங்களுக்கு தவறு இழைப்பார். 

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தால் அது தொடர்கதையாக மாறுகிறது. மனிதனின் ஆசைக்கு எல்லையே இல்லை என்பதைத் தான் இது நமக்கு தெரிவிக்கிறது. நல்லவர்களை இந்த உலகம் சுரண்டத் தான் முயல்கிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மனசாட்சி உள்ள மனிதர்கள் இப்பொழுது குறைந்து விட்டது தான்.

மனசாட்சி உள்ள மனிதர்கள் நல்லவர்களை சுரண்ட மாட்டார்கள். அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அவர்களின் உதவிகளை மறக்க மாட்டார்கள். மனசாட்சி உள்ள மனிதர்கள் நல்லவர்களை மதிப்பார்கள். 

இந்த கலியுகத்தில்  ரொம்ப நல்லவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றே மக்கள் நினைக்கின்றார்கள். அவர்களை ஏமாளிகள் என்றும் சொல்லுவார்கள். கலியுகத்தில் ரொம்ப நல்லவராக இருப்பது சரியா? நிச்சயம் இல்லை. நீங்கள் நல்லவர்களுக்கு மட்டும் உதவி செய்யுங்கள். உங்கள் உதவிகளை மறக்காதவர்களுக்கு உதவி செய்யுங்கள். சரியான மனிதர்களுக்கு சரியான நேரங்களில் மட்டும் உதவி செய்யுங்கள். அதுவும் உங்களுக்கு பாதிப்பு வராதபடி ஒரு எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லோருக்கும் நல்லவராக இருக்காதீர்கள். நல்லவர்களுக்கு மட்டும்  நல்லவராக இருந்தால் அதுவே சிறந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

சகிக்க முடியாத 7 நபர்கள் 

உங்கள் விதியின் 5 விதிகள் 

Post a Comment

 
Top