பொதுவாக, நாம் பிறருக்கு உதவிகள் செய்வது நல்ல விஷயம் தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் போது அளவுக்கு  அதிகமாக  உதவிகள் செய்தால் பிரச்சினைகள் வரத்தானே செய்யும்? சில சமயங்களில் சிலர் நம்மிடம் உதவி கேட்கும் போது நாம்  'இல்லை' என்று தைரியமாக சொல்ல வேண்டும்.  ஒரு சிலர் இல்லை என்று சொல்ல தயங்குவார்கள்.  அதனால் அவர்கள் பல நஷ்டங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும் என்பது நிஜம். 'இல்லை' என்று சொல்ல ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? மேலே படியுங்கள்.....


நீங்கள் ஒருவருக்கு மனதார ஒரு உதவி செய்தால் அவர் மிக்க மகிழ்ச்சி அடைவார் என்பது உண்மையே. ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. நீங்கள் முகம் சுழிக்காமல் ஒருவருக்கு மனதார உதவும் போது, உதவி பெற்றவர் உங்களிடம் தயங்காமல் மேலும் மேலும் உதவிகள் கேட்பார்.  அது ஒரு முடிவில்லா தொடர்கதை போல் நீண்டு கொண்டே செல்லும்.

சில சமயம் உங்களால் உதவி செய்ய முடியாமல் போனால் அவர்கள் உங்களை கடுமையாக விமர்சிக்கவும் வாய்ப்பு உள்ளது. எப்பொழுதுமே நல்லவர்களுக்குத் தான் கெட்ட பெயர் எளிதில் வந்தடையும். 

நீங்கள் உதவி செய்ய ஒப்புக் கொண்ட பின் உங்களால் அதை சரியாக செய்ய முடியாமல் போனாலும் உங்களுக்கு கெட்ட பெயரே மிஞ்சும்.

சில சமயங்களில் 'இல்லை' என்று சொல்ல முடியாததால் நீங்கள் செய்யும் காரியங்கள் சில சமயங்களில் நல்ல பலனைத்  தர இயலாது.

'இல்லை' என்று நீங்கள் சொல்லா விட்டால் உங்கள் திறமையின்மை வெளிப்படவும் வாய்ப்பு உண்டு எனலாம்.

'இல்லை' என்றுசொல்லி பழகா விட்டால் உதவி பெறுபவர்கள் உங்களை அடிமைகள் போல் நினைக்க வாய்ப்பு உள்ளது.

இல்லை என்று சொல்ல தெரிந்தவர்களை  தன்னம்பிக்கை உடையவர்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்.

நீங்கள் 'இல்லை' என்று சொல்ல தெரிந்தவர் என்றால் நீங்கள் 'ஆம்' என்று சொல்லும் போது அதற்கு அதிக மரியாதை கிடைக்கும். 

நீங்கள் 'இல்லை' என்று சொல்லக் கற்றுக் கொண்டால் தேவையற்ற மன அழுத்தங்களையும், விரயங்களையும் தவிர்க்கலாம்.

'இல்லை' என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!

எதிர் பாராததை எதிர் பாருங்கள்  

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?




Post a Comment

 
Top