நாம் நம் விருப்பப்படி எல்லா விஷயங்களிலும் நடக்க முடியாது. சில சம்யனக்ளில் நமக்கு பிடிக்காத எத்தனையோ விஷயங்களை நாம் மற்றவர்களுக்காக செய்ய வேண்டி உள்ளது என்பது நிஜம். அது மட்டுமல்ல நாம் நம் சுயத்தை இழந்து மற்றவர்களுக்காக சில விஷயங்களில் நம்மை நாமே மாற்றிக் கொள்கிறோம் என்பதும் உண்மை தான். உங்கள் சுயத்தை இழந்து மற்றவர்களுக்காக நீங்கள் மாறத் தான் வேண்டுமா? மேலே படியுங்கள்.....
நூற்றுக்கு நூறு தன் அசல் குணங்களோடு எந்த போலித்தனமும் நடிப்பும் இல்லாமல் வாழ்வது சிறு குழந்தைகள் மட்டுமே. நாம் தான் குழந்தைகளுக்கு பொய் சொல்ல கற்றுக் கொடுக்கிறோம். போலியான வாழ்க்கை வாழவும் கற்றுக் கொடுப்பது நாமும் நாம் சார்ந்த இந்த சமுதாயமே என்றால் அது மிகையாகாது.
முதலில் பெற்றோர்களுக்காக நாம் நம் சுயத்தை இழக்கிறோம். அவர்களுக்குப் பிடித்த கல்வியைப் படிக்கிறோம். அவர்களுக்கு பிடித்த விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். நம் வாழ்க்கையையே அவர்கள் தான் பெரும்பாலும் உருவாக்குகிறார்கள். மேலும் நாம் நம் சமுதாயத்திற்கு பயந்து, பயந்து தான் வாழ்கிறோம். அதனால் தான் நாம் நமக்குப் பிடித்த எல்லா விஷயங்களையும் தைரியமாக செய்ய முடிவதில்லை. மேலும் நாம் மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்பது நிஜம்.
நாம் மற்றவர்களுக்காக நம்மை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் வாழ முடியுமா? அது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது. நாம் நம் இஷ்டம் போல் முழுமையாக வாழ முற்பட்டால் அதனால் பல கஷ்டங்களும் தீமைகளும் விளையும் என்பது திண்ணம்.
ஊரோடு ஒட்டி வாழவேண்டும். மற்றவர்களுக்காக நாம் நம்மை கொஞ்சமாவது மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். அது தான் எல்லோருக்கும் நல்லது.
வாழ்க வளமுடன்!
உண்மையான சந்தோஷம் அடைவது எப்படி?
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள 20 சிறந்த வழிகள்

Post a Comment