நாம் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்க்கையையே திருப்பி போடக் கூடும். சில முடிவுகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கின்றன. சில முடிவுகள் நஷ்டத்தைக் கொடுக்கின்றன.  சில முடிவுகளை நாம் இதயத்தைக் கேட்டு எடுக்கிறோம். சில முடிவுகளை நாம் மூளையை கேட்டு எடுக்கிறோம். சிலர் பெரும்பாலும் இதயம் சொல்லுவதையே கேட்கின்றனர். சிலர் பெரும்பாலும் மூளையையே பின்பற்றுகின்றனர். முடிவுகள் எடுக்கும் போது இதயத்தை கேட்க வேண்டுமா? மூளை சொல்லுவதை ஏற்க வேண்டுமா? மேலே படியுங்கள்....


நாம் முடிவு எடுக்கும் போது எந்த முடிவு எடுத்தால் என்ன நன்மைகள் அல்லது தீமைகள் விளையலாம் என்பதை ஆராய்ந்து பெரும்பாலும் முடிவு எடுக்கிறோம் என்றே நினைக்கின்றேன். அதாவது மூளை சொல்லுவதைக் கேட்டு தான் முடிவு எடுக்கிறோம். ஆனால் சில சமயம் இதயம் சொல்லுவதை அல்லது உங்கள் உள்ளுணர்வு சொல்லுவதை பின்பற்றுவது நல்லது. ஒரு சிலர் தான் இதயம் சொல்லுவதையே பெரும்பாலும் கேட்பார்கள். 

ஒரு தாய் தன்னிடம் இருக்கும் ஒரே சொத்தை மகன் கேட்கின்றான் என்பதற்காக விற்கத் துணிவாள். அவள் மூளை அதை செய்யாதே என்றே எச்சரிக்கை மணி அடித்துக் காண்பிக்கும். ஆனாலும் அவள் இதயம் அவள் மகனுக்காக கடைசி சொத்தை விற்கவே சொல்லும். 

எல்லா சமயங்களிலும் நாம் மூளை சொல்லுவதைக் கேட்டு  முடிவு எடுக்கக் கூடாது என்றே நினைக்கின்றேன். சில சமயங்களில் அறிவு சொல்லுவதை கேட்காமல் உணர்வுபூர்வமாக முடிவு எடுக்கத்தான் வேண்டும். ஏன் என்றால் அன்பு தான் சில சமயங்களில் பணத்தை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

முடிவுகள் எடுக்கும் போது இதயத்தை கேட்க வேண்டுமா? மூளை சொல்லுவதை ஏற்க வேண்டுமா? இடம், பொருள், ஏவல் அறிந்து முடிவு எடுக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!






Post a Comment

 
Top