ஒரு சிலர் மற்றவர்களின் திறமைகளையோ நல்ல விஷயங்களையோ  பார்க்கும் போது தாராளமாக தயக்கமின்றி பாராட்டுவார்கள். ஆனால் பலர் அவ்வளவு எளிதில் மற்றவர்களை பாராட்டமாட்டார்கள். பிறரை பாராட்டினால் ஏதோ பல கோடி ரூபாய் நஷ்டம் ஆகிவிடுவது போல் பாராட்ட மிகவும் தயங்குவார்கள். நீங்கள் பிறரை தயக்கம் இல்லாமல் தாராளமாக பாராட்டுபவரா? மேலே படியுங்கள்......



இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். ஒருவர் ஒரு விஷயத்தை திறமையாக பண்ணும் போது நாம் மனம் திறந்து அவர்களைப் பாராட்ட வேண்டும். ஒரு சிலர் நல்ல காரியங்களை பண்ணுவார்கள். அல்லது அவர்கள் உங்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கலாம். நீங்கள் அவர்களின் நல்ல குணத்தை மனமார பாராட்டலாம். பாராட்டுவதால் நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை. மாறாக, ஒருவரை பாராட்டும் போது அவர்களின் அன்பை நாம் எளிதில் பெற முடியும். மேலும் பாராட்டுபவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். 

ஆனால் அதே சமயம், போலியான பாராட்டு தவறான ஒன்றாகும். அதை முகஸ்துதி என்றே சொல்ல வேண்டும். பாராட்டும் போது அது உண்மையாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம் ஆகும். 

பாராட்டுவதால் நமக்கு எந்த இழப்போ அல்லது ஏற்படுவது இல்லை. மாறாக, அதனால் நமக்கு பல நன்மைகள் விளையக்கூடும். இருந்தும் ஏனோ பலர் பிறரை எளிதில் பாராட்டுவதே இல்லை. தயங்காமல், தாராளமாக உண்மையாக பாராட்டுபவர்கள் உண்மையில் மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்களும், மன முதிர்ச்சி இல்லாதவர்களும் தான் பாராட்ட யோசிப்பார்கள்.

திறமைகளை பார்க்கும் போது தயங்காமல் தாராளமாக பாராட்டுங்கள். அதனால் உங்களுக்கு பல நன்மைகளும், நட்புகளும் கிடைக்கும். அனாவசியமான செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை பாராட்டும் போது சிக்கனத்தை தவிர்த்து மிகவும் தாராளமாக பாராட்ட வேண்டும்.

வாழ்க வளமுடன்! 

ஒப்பிடுதல் முன்னேற்றத்திற்கு தேவையா?

அவமதிப்பை தாங்கிக் கொள்ள முடியுமா?



Post a Comment

 
Top