பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு அற்புதமான கலை என்றே சொல்லலாம். குழந்தைகள் இவ்வுலகிற்கு வரும்போது எந்தவிதமான  கர்வமோ, பயமோ, அகங்காரமோ, பொய்யோ இல்லாமல் புனிதமாகத் தான் வருகின்றார்கள். நாம் தான் பிள்ளைகளை பயமுறுத்தி, பொய் புரட்டு சொல்லி, குழந்தைகளை கெடுத்து விடுகிறோம். மேலும் குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களை அடித்து வளர்ப்பது சரியா? மேலே படியுங்கள்.....


பொதுவாக நிறைய பேர் குழந்தைகளை அடித்து வளர்ப்பது தான் நல்லது என்று நினைகின்றார்கள். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்று ஒரு பழமொழியையும் தங்கள் கருத்துக்கு வலிமை சேர்க்கப் பயன்படுத்துவார்கள். குழந்தைகளை அடித்து வளர்த்தால் அவர்கள் வளர்ந்து நல்ல குடிமகன்களாக வாழ்வார்களா?

எந்த ஒரு விஷயத்தையுமே வன்முறையினால் சாதிக்கவே முடியாது என்பது தான் நிஜம். பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கின்றார்கள். சில பெற்றோர்கள் கட்டுப் பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை அடிக்கின்றார்கள்.

உண்மையில் குழந்தைகளை அடித்து வளர்ப்பது தவறு. அடித்து வளர்ப்பதால் நன்மைகள் ஏற்படுவது போல் தோன்றும். அது வெறும் மாயை தான். அது ஒரு குறுகிய கால நன்மையே. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அடிப்பதால் தீமைகளே விளையும் என்பது உறுதி. மேலும் குழந்தைகள் தங்கள் சுய கௌரவத்தையும், தன்னம்பிக்கையையும் நாளடைவில் இழப்பார்கள் என்பது தான் உண்மை.

குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களை அன்பினால் மட்டுமே திருத்த முடியும். சில சமயங்களில் தேவைப்பட்டால் மென்மையாக கண்டிக்கலாம். தண்டிக்கவும்  செய்யலாம்.  தண்டனை கொடுப்பதாக இருந்தால், 'இன்று தொலைக்காட்சி பார்க்க கூடாது', 'இன்று தின்பண்டம் கிடையாது', 'இன்று வீடியோ கேம்ஸ் விளையாடக் கூடாது',  என்பது போன்று இருத்தல் நலம்.

மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், குழந்தைகள் நீங்கள் அவர்களை எந்த அளவுக்கு நேசிக்கின்றீர்கள் என்பதை முழுமையாக புரிந்து வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் அவர்களுக்கு சிறிய சிறிய தண்டனைகளை தரலாம். அதுவும் கூட, அடிப்பது என்பது நீங்கள் பிரயோகிக்கும் கடைசி அஸ்திரமாக இருக்கட்டும்.

வாழ்க வளமுடன்!

குழந்தைகளின் வாழ்க்கையைக் கெடுக்கும் அன்பான பெற்றோர்கள் 

அன்பாக இருந்தால் உங்களை அடிமையாக்கி விடுவார்களா?

Post a Comment

 
Top