பிடிக்கிறதோ இல்லையோ, நாம் எல்லோரும் ஏதோ ஒரு தொழிலை அல்லது வேலையை செய்து கொண்டுதானிருக்கிறோம். ஒரு சிலர் தாங்கள் படித்த படிப்பு சார்ந்த வேலையை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நிச்சயம் பாக்கியசாலிகள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் பலர் தாங்கள் படித்த படிப்புக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வேலையைத தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏதோ பிழைப்புக்காக அந்த வேலையை கடமையே என்று செய்துக் கொண்டிருப்பார்கள். அவர்களால் அவர்கள் தொழிலை நிச்சயம் நேசிக்க முடியாது. உண்மையில் நாம் செய்யும் தொழிலை தெய்வமாக வழிபட வேண்டும். அப்பொழுது தான் நம் தொழிலும் வாழ்க்கையும் மேம்படும். மேலே படியுங்கள்......
ஒரு சிலர் தங்கள் பார்க்கும் தொழிலை மிகவும் நேசிப்பார்கள். அந்த தொழிலை அதிகமாக மதிப்பார்கள். அவர்களைப் பொருத்தமட்டில், அவர்களின் தொழில் தான் அவர்களின் தெய்வம் ஆகும். அப்படி பட்டவர்கள், நிச்சயம் ஒரு நாள் அவர்களின் தொழிலில் கொடி கட்டி பறப்பார்கள். தொழிலை நேர்மையாக செய்வார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.
நாம் மனிதனாக பிறந்து விட்டால் நிச்சயம் ஒரு தொழிலை கடைசி வரை செய்ய வேண்டும். அந்த தொழிலை தெய்வமாக வழிபட்டு விட்டால்? வெற்றி நிச்சயம் அல்லவா?
நீங்கள் உங்கள் தொழிலை கொண்டாட வேண்டுமென்றால், உங்களுக்கு அந்த தொழில் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் அந்த தொழிலில் கெட்டிக்காரராக இருக்க வேண்டும். அந்த தொழிலில் அபரீதமான ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த தொழிலை நீங்கள் கடவுளாக பார்க்க முடியும்.
நீங்கள் உங்கள் தொழிலை நேசிக்கின்றீர்களா? அந்த தொழிலை கடவுளாக பாவிக்கின்றீர்களா?
வாழ்க வளமுடன்!
Post a Comment