பெரும்பாலான மக்கள் தங்களுக்கு அது இல்லை இது இல்லை என்று புலம்பிக் கொண்டே வாழ்ந்து வருகிறார்கள். உண்மையில் இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் தேவையான அத்தியாவசியமான உணவு போன்ற அனைத்தும் இவ்வுலகில் இருக்கின்றன என்பதே நிஜம். அடுத்த வேளை  உணவை பற்றி சற்றும் கவலைப் படாமல் எத்தனை மிருகங்கள் காட்டில் வாழ்கின்றன? அவை உணவைக் கூட சேமிப்பதில்லை. இந்த இயற்கை  
அல்லது அந்த இறைவன் எல்லோருக்கும் படி அளந்து கொண்டுதானிருக்கிறான்.  எல்லோருக்கும் தேவையானவை இவ்வுலகில் இருக்கின்றது என்றே தோன்றுகிறது.  என்ன இல்லை இப்பூவுலகில்? மேலே படியுங்கள்.....



உண்மையில் இப்பூமியில் பிறந்த எல்லோருக்கும் தேவையான எல்லா விஷயங்களும் இங்கே நமக்கு கிடைக்கின்றன. ஆனால் ஒரு சிலர் உணவின்றி மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வாழ்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அது ஒரு சிலரின் பேராசையினால் தான். அல்லது அவர்களின் சோம்பேறித்தனத்தினால் தான் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நல்ல ஆரோக்கியம் ஏழைகளுக்கும் இறைவன் வழங்குகிறான். இன்னும் சொல்லப் போனால் ஏழைகள் தான் பணக்காரர்களை விட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான். ஏழைகளுக்கும் இறைவன் பலவிதமான திறமைகளை வாரி வழங்கி தான் வருகிறான். 

எல்லோருடைய தேவைகளுக்கும் இவ்வுலகில் எல்லாமே இருக்கின்றது. எல்லோருடைய பேராசைகளுக்கு  வேண்டுமென்றால் இவ்வுலகில் இல்லாமலிருக்கலாம். 

என்ன இல்லை இப்பூவுலகில்? 

வாழ்க வளமுடன்!

உங்கள் மனம் என்ன குப்பைத் தொட்டியா?

நல்லவர்கள் கஷ்டப் படுவதேன்?

Post a Comment

 
Top