பொதுவாக நாம் பணம் தான் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்று நினைக்கின்றோம். பணம் வாழ்க்கையில் நமக்கு பல வசதிகளைக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்று சொன்னால் அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சந்தோசம் தான் பணத்தைக் கொடுக்கிறது என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள்.  பணம் சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? சந்தோஷம் பணத்தைக் கொடுக்கிறதா? மேலே படியுங்கள்....



பணம் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பணம் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதும் உண்மை தான். ஆனால் பணம் மட்டும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து விட முடியாது என்பதும் நிஜம். கோடிக்கணக்கில் பணம் இருந்து ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் இருந்தால் அவரால் அந்த பணத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க முடியுமா? இது ஒரு புறம் இருக்க சந்தோஷமாக உள்ளவர்களால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்கின்ற கருத்தும் இருக்கிறது.  

நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் உங்கள் மனம் அமைதியாகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களால் உங்களின் முழு திறனையும் வெளிப் படுத்தி நன்றாக சம்பாதிக்க முடியும். யோசித்துப் பாருங்கள். நீங்கள் துன்பத்துடனும், எதிர்மறை (NEGATIVE) எண்ணங்களுடனும் இருந்தால் உங்களால் பணம் சம்பாதிக்க முடியுமா?

பணத்தால் சந்தோஷத்தை தர முடியும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை சந்தோஷமாக உள்ளவர்களால் தான் சம்பாதிக்க முடியும் என்பதும். 

வாழ்க வளமுடன்!

உங்கள் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பது எது?

உங்களின் உள்  எதிரிகள் 

Post a Comment

 
Top