தொப்பை உடல் நலத்திற்கு கெடுதல் என்பது இப்பொழுது பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் எப்படி தொப்பை கொழுப்பை குறைப்பது என்பது தான் எல்லோருக்கும் புதிராக இருக்கிறது. உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ 10 எளிய வழிகள்.


1. உணவு முறை: சரியான உணவை சரியான அளவில் உட்கொள்ளுவது மிகவும் முக்கியம். இறைச்சி, வறுத்த உணவு, பதப் படுத்தப் பட்ட உணவு, துரித உணவு, இவற்றை கூடிய மட்டில் தவிர்க்கவும். கார்போனடேட் பானங்களை தவிர்க்கவும்.

2.  நார் சத்து உள்ள உணவு, காய்கறிகள், பழங்கள் இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். 

3. நன்றாக மென்று சாப்பிடுங்கள். கொழுப்பு  உடலில் தங்காது.  

4. பூண்டு ஒன்று அல்லது இரண்டு பல்களை  நன்றாக நசுக்கி  தினமும்  பச்சையாக சாப்பிடுங்கள்.

5. அளவோடு சாப்பிடுங்கள். 

6. தினமும் 2 அல்லது 3 கி.மீ வேகமாக நடக்கவும்.

7. தொப்பையைக் குறைக்க பிரத்யேகமான சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை செய்யலாம் (வீடியோவைப் பார்க்கவும்)

8. தேனுடன் தண்ணீர் கலந்து சாப்பிடுங்கள்.

9. வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம்பழ சாற்றை கலந்து குடியுங்கள்.

10. பகலில் தூங்குவதை தவிர்க்கவும்.

11. ஸ்கிப்பிங் தினசரி செய்யலாம்.

12. சைக்கிள் தினசரி 3 அல்லது 5 கி.மீ  ஓட்டலாம்.  ஜாக்கிங் செல்வதும் நல்ல பலன் தரும். 

13. காலை உணவை கட்டாயம் உண் ண வேண்டும்.

14. இரவு உணவை படுப்பதற்கு 3 மணி நேரம் முன் உண்ணவும் 

15. தொப்பையைக் குறைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் தீவிரமாக எப்பொழுதும் இருக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்! 




                                             
                                           

உணவே மருந்தாக முடியுமா?

புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி?

Post a Comment

 
Top