நீங்கள்  எவ்வளவு தான் சரியான  வாழ்க்கை  வாழ்ந்தாலும் சில சமயங்களில் நீங்கள் அவமானங்களை சந்திக்கத்தான் வேண்டும். அவமானங்களை சந்திக்காதவர் யார் இருக்கிறார்கள் இந்த உலகில்? நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ, பொது இடங்களிலோ நீங்கள் அவமதிக்கப் பட்டிருப்பீர்கள். பஸ்ஸில் கண்டக்டரிடம் சில்லறை இல்லாமல் அவமானப்படாதவர் யார் இருக்கிறார்கள் இந்த சென்னைப் பட்டணத்தில்?  அவமானங்கள் வாழ்க்கையில் சகஜமப்பா. மேலே படியுங்கள்.......


சில வீடுகளில் பெற்றோர்களே பிள்ளைகளை அவமானப் படுத்துவார்கள் அவர்கள் சரியாகப் படிக்க வில்லை என்று.  அதனால் அந்த பிள்ளை நிச்சயம் தன்னம்பிக்கையை இழப்பான். பள்ளிகளில் அவமானம் தொடரலாம். வளர்ந்த பின் காதல் வசப்பட்டு அந்த காதலை சொல்லும்போது அவமானப் படலாம். பேச ஆசைப் பட்டு மைக்கைப் பிடித்த பின் வார்த்தைகள் வராமல் ஒரு சிலர் அவமானப் பட்டிருக்கலாம்.

ஆக, அவமானங்களை நாம் நம் வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாது.  அதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளுவது தான் நல்லது. ஒரு சிலர் அவமானங்களிலிருந்து வைராக்கியமும் உத்வேகமும்  பெற்று சாதனை படைப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அந்த அவமானங்கள் காரணமாக இருந்திருக்கும்.

ஒரு சிலர் அவமானங்களினால் கூனி குறுகி போவார்கள். தன்னம்பிக்கையை இழப்பார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஒருவர் நம்மை அவமானப் படுத்தினால், நம்மிடம் ஏதாவது குறை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குறைகள் இருந்தால் அவற்றை நிறைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம் மீது எந்த தவறும் இல்லாத போது ஒருவர் நம்மை அவமானப் படுத்தினால் வருத்தப்படாத வாலிபராக மாறுவது உத்தமம். 'அவமானங்கள் வாழ்க்கையில் சகஜமப்பா' என்று கவுண்டர் பாணியில் சொல்லிக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.

வாழ்க வளமுடன்!

மகிழ்ச்சியாய் வாழும் இரகசியங்கள் 

வீண் விவாதங்களினால் என்ன பயன்?


Post a Comment

 
Top