பொதுவாக சுக்கிர தசை நன்மையே செய்யும் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஒருவன் நன்றாக இருந்தால் உடனே எல்லோரும் 'அவனுக்கு சுக்கிர தசை நடக்குது போல, அதான் அவன் தொட்டதெல்லாம் துலங்குது' என்று சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். உண்மையில் சுக்கிர தசை எல்லோருக்கும் நன்மை செய்யுமா? மேலே படியுங்கள்...


பொதுவாக எல்லோரும் சுக்கிர தசை நன்மை செய்யும் என்றும் சனி தசை தீமை செய்யும் என்றே நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு என்பதை ஜோதிடம் அறிந்தவர்கள் அறிவார்கள். அதாவது சனி தசை ஒருவருக்கு அதிக அளவில் நன்மைகள் செய்யலாம். சுக்கிர தசை ஒருவருக்கு அளவிடமுடியாத துன்பங்களையும் தரலாம். ஒரு கிரகம் ஒருவருக்கு நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பதை அறிய வேண்டுமென்றால், அதன் ஆதிபத்தியம், ஏறிய நட்சத்திரம், ஏறிய உபநட்சத்திரம், அது அமர்ந்த ராசி அதிபதியின் நிலை, சேர்ந்த கிரகம், பார்த்த கிரகம்  போன்றவற்றை நன்றாக ஆராய வேண்டும். பொத்தாம் பொதுவாக சுக்கிர தசை எல்லோருக்கும் நல்லது செய்யும் என்று கூறுவது தவறு.

உதாரணமாக, மீன லக்ன ஜாதகருக்கு, சுக்கிரன் ஆறில் சிம்மத்தில் கேதுவுடன் சேர்க்கைப் பெற்று தசையை நடத்தினால் ஜாதகர் அதீதமான துன்பங்களை அனுபவிப்பார் என்பது  நிச்சயம். பணம் வேண்டுமென்றால் ஓரளவுக்கு அவருக்கு கிடைக்கும். மற்றபடி ஜாதகர் சொல்லொண்ணா  துக்கங்களை  கண்டிப்பாக அனுபவிப்பார் என்பது நிஜம்.

ஒன்று வேண்டுமென்றால் ஒத்துக் கொள்ளலாம். சுக்கிர தசையில் எல்லோரும் ஓரளவுக்காவது பண வரவு பெறுவார்கள் என்பது தான் அது. ஆனால் பணம் மட்டும் ஒருவர் வாழ்க்கையை சந்தோஷமாக்கி விட முடியாது அல்லவா?

தீய தசை நடந்தாலும் இறை சக்தியால் கெடு பலன்களை குறைத்துக் கொள்ளலாம். எல்லா கிரகங்களும் கடவுளின் கட்டுப் பாட்டிற்குள் தான் இருக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.

வாழ்க வளமுடன்!

வாஸ்து சாஸ்திரம் வேலை செய்கிறதா?

உங்கள் விதி எண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி?

Post a Comment

 
Top